தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறு

Tamil Nadu South Chennai  Parliamentary Constituency History: தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 15, 2024, 10:40 PM IST
  • தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் தென் சென்னையும் ஒன்று.
  • தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 20,07,816.
தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறு title=

South Chennai  Lok Sabha Constituency Full Details: தென் சென்னை மக்களவைத் தொகுதி என்பது தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றாகும். இது முன்பு மெட்ராஸ் சவுத் என்று அழைக்கப்பட்டது. இது 1957 இல் சென்னை மக்களவைத் தொகுதியைப் பிரித்து உருவாக்கப்பட்டது. தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று.

தென் சென்னை மக்களவைத் தொகுதி விவரம்

தொகுதி மறுவரையறைக்கு முன்னதாக 1977 முதல் 2009 வரை ட்ரிப்ளிக்கேன், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம், தியாகராயநகர் ஆகிய தொகுதிகள் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் கீழ் இருந்தது. 2009 ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறைக்கு பிறகு, தற்போது விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் இணைக்கப்பட்டன. தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு மக்களவைத் தேர்தல் 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு 1957 முதல் 2019 வரை தேர்தல் நடந்துள்ளது. முதல் முறையாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி வெற்றி பெற்றார். இவர் மத்திய அரசின் முதல் நிதியமைச்சர் ஆவார். வட சென்னை தொகுதியை பொறுத்த வரை திமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்து காங்கிரஸ் ஐந்து முறையும், அதிமுக மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் படிக்க - தேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறு

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை நிலவரம்

- மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 20,07,816
- ஆண் வாக்காளர்கள்: 9,93,590
- பெண் வாக்காளர்கள்: 7,59,208
- மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 454

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள சட்டமன்ற தொகுதிகள் நிலவரம்

- விருகம்பாக்கம்
- சைதாப்பேட்டை
- தியாகராய நகர்
- மயிலாப்பூர்
- வேளச்சேரி
- சோழிங்கநல்லூர்

மேலும் படிக்க - தேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறு

2024 லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்

திராவிட முன்னேற்றக் கழகம் - தமிழச்சி தங்கபாண்டியன் 
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - ஜெயவர்தன்
பாரதிய ஜனதா கட்சி - தமிழிசை சௌந்தரராஜன்
நாம் தமிழர் கட்சி - தமிழ் செல்வி

2019 மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதி வெற்றி நிலவரம்

2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 71.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 564,872 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3,02,649 வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் ஜே. ஜெயவர்தன் இரண்டாம் இடம் பிடித்தார். அதற்கு அடுத்த இடத்தில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஆர். ரங்கராஜன் 1,35,465 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏ.ஜே.ஷெரின் 60,515 வாக்குகளும் பெற்றனர்.

மேலும் படிக்க - தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News