கரூர் மாவட்டம் அதிமுக சார்பாக கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தாந்தோணி மேற்கு ஒன்றிய செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கோவை மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சின்னச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | விஜய் பேச்சுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலடி!
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இப்போது நல்ல கட்சிகள் எடப்பாடியை அணுகி பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர் கூட தான் இருக்கிறேன் உங்களுக்கு தெரியும், நல்ல கூட்டணி எடப்பாடியார் தலைமையில் அமையும், நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த மூன்றரை ஆண்டுகள் திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. இந்த ஆட்சியில் சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர், இந்த ஆட்சி போக வேண்டும் என நினைக்கிறார்கள், எப்போதும் திமுகவிற்கு ஓட்டுப் போடுகின்ற அரசு ஊழியர்கள் இந்த ஆட்சி வீட்டுக்குப் போக வேண்டும் என நினைக்கிறார்கள் என்றார்.
ஆலோசனை கூட்டத்தில் அப்பப்பா அறுசுவை அமோகம்!
கரூரில் அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மதிய உணவு கரூர் மாவட்ட அதிமுக கழகத்தின் சார்பாக பிரேம் மஹால் மண்டபம் அருகே நடைபெற்றது. அதில் மட்டன் பிரியாணி, மட்டன் குழம்பு, முட்டை, மீன் வருவல் மற்றும் தேவைக்கு ஏற்ப தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக அதிமுக மிகவும் சோர்வாக காணப்படுகிறது என சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில் தற்போது தேர்தல் களத்தில் மீண்டும் புத்துணர் பெற்று அதிமுக மாவட்டத்தின் சார்பாக தொடர்களுக்கு மதிய உணவு வழங்கி புது விதமான தேர்தல் யுத்தியை கையாண்டனர். குறிப்பாக மதிய உணவு தொண்டர்களுக்கு சைவ உணவு வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் சற்றும் யாரும் எதிர்பாராத நிலையில் தொண்டர்களுக்கு மட்டன் பிரியாணி, மீன் வறுவல், மட்டன் குழம்பு, வெங்காய பச்சடி, முட்டை உள்ளிட்ட அறுசுவை அசைவ உணவை அசைத்தி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது கரூர் மாவட்ட அதிமுக.
இந்த நடைமுறையை மின்சாரத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் வி செந்தில் பாலாஜி நடைமுறைக்கு கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தேர்தல் காலத்தில் பாரதிய ஜனதா கட்சியும் இந்த ஃபார்முலாவை பின்பற்றி தங்களது தொண்டர்களுக்கு உணவுகளை வழங்கி சிறப்பித்த நிலையில் அதே நிலையில் தேர்தல் காலத்தின் போது கட்சி நிர்வாகிகளுக்கு ஆங்காங்கே சைவ உணவு சமையல் செய்து கொடுத்த நிலையில் தற்போது அதிமுகவும் தொண்டர்களை உற்சாகப்படுத்த அசைவை உணவை வழங்கி அசத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ