ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 1300 டன் கந்தக அமிலம் லாரிகள் மூலம் வெளியேற்றம் -சந்தீப் நந்தூரி!
ஸ்டெர்லைட் ஆலையை மூடகொரிய மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டது. மேலும் கடந்த மே 28 தமிழக முதல்வர் உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
சமீபத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலால் பொது மக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சரி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர். ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு ஏற்பட்ட கந்தக அமில குடோனில் சுமார் 1,000 லிட்டர் கந்தக அமிலம் இருப்பு உள்ளது.
இந்நிலையில், தற்போது இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில்...!
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 1300 டன் கந்தக அமிலம் லாரிகள் மூலம் வெளியேற்றம் செய்துள்ளோம். தற்போது கசிவு ஏற்பட்ட கொள்கலனில் குறைந்த அளவு மட்டுமே கந்தக அமிலம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய 100-வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது!