பாலியல் வழக்கில் கைதான பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன்!

பாலியல் வழக்கில் சிறையில் உள்ள சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 8, 2022, 03:09 PM IST
  • செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுசீல்ஹரி சர்வதேச பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
  • சிறார்களை சிவசங்கர் பாபா பாலியல் ரீதியாக அணுகி முத்தமிடுவது, கட்டிப்பிடிப்பது போன்றவற்றை செய்ததாக தெரிகிறது.
பாலியல் வழக்கில் கைதான பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன்! title=

கடந்த 2010 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுசீல்ஹரி சர்வதேச பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. 

புகார் சுமத்தப்பட்ட சிவசங்கர் பாபா செய்த கொடுமைகளை மாணவிகள் ஆடியோ வாயிலாக வெளியிட்டது கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்வு எழுத செல்லும் சிறார்களை சிவசங்கர் பாபா பாலியல் ரீதியாக அணுகி முத்தமிடுவது, கட்டிப்பிடிப்பது போன்றவற்றை செய்ததாக தெரிகிறது.

Siva Shankar - Samayam

அவர் தன்னை கிருஷ்ணன் என்று கூறிக்கொண்டு பள்ளி மாணவிகளிடம் வலுக்கட்டாயமாக உறவு வைத்து வந்தார் என திடுக்கிடும் புகார்கள் எழுந்தன.

ஆதாரங்கள் வீடியோ, ஆடியோ வாயிலாக வெளியானதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர்.

மேலும் படிக்க | 13 வயது மாணவிக்கு 55 வயது ஆசிரியர் பாலியல் தொல்லை - வேலியே பயிரை மேய்ந்த அவலம்!

இது குறித்து அப்பள்ளி மாணவிகள் மற்றும் குடும்பத்தார் சார்பில் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபாவை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

சிவசங்கர் பாபா மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

Siva Shankar - Google

இந்நிலையில் சிவசங்கர் பாபா தன் மீதான வழக்குகளில் இரண்டு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த வழக்கின் விசாரணையில், 2010-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்திற்கு 2021-ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்குகளை ரத்து வேண்டும் என சங்கர் பாபா சார்பில் வாதிடப்பட்டது.

மேலும் படிக்க | விருதுநகர் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 பேர் வேறு சிறைக்கு மாற்றம்

அப்போது, காவல்துறை சார்பில், வழக்குப்பதிவு செய்வதில் எந்த தாமதமும் இல்லை. புகார் மட்டுமே தாமதமாக அளிக்கப்பட்டது, இதனை காரணம் காட்டி வழக்கை ரத்து செய்யக்கோர முடியாது என வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சிவசங்கர் பாபா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

இதற்கிடையில் ஜாமின் கோரி, சிவசங்கர் பாபா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, அப்போது ஜாமீன் வழங்குவது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் இன்று தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சிவசங்கர் பாபாவுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதாகவும், அவருக்கு ஜாமின் வழங்கினால், சாட்சியங்களை கலைப்பதற்கு அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும், சிவசங்கர் பாபாவினால் வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும், எனவே அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

மேலும், சாட்சிகளை கலைத்தாலோ, கலைக்க முயன்றாலோ ஜாமின் ரத்து செய்யப்படும் என்று சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

மேலும் படிக்க | தமிழக கல்விக்கொள்கை: புதிதாக அமைக்கப்பட்ட குழு என்ன செய்யும்?- எழுத்தாளர் விழியன் பகிர்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News