சென்னையில் கடந்த 14 நாளில் 10 கொலைகள்! கொலை நகரமாக மாறி வரும் தலைநகரம்

Crime News In Tamil: தமிழகத்தின் தலைநகரம் கொலை நகரமாக மாறி இருக்கிறது என்றால் மிகை ஆகாது நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

Edited by - Shiva Murugesan | Last Updated : Jul 20, 2023, 11:53 PM IST
  • பட்டபகலில் நடந்தேறும் கொலைகளால் பொதுமக்கள் சாலைகளில் நடப்பதற்கு அச்சம்.
  • சென்னையில் அதிகரித்து வரும் பெட்ரோல் குண்டு கலாச்சாரம்.
  • சிறுவர்களை வைத்து படுகொலைகளை அரங்கேற்றும் ரவுடி கும்பல்.
சென்னையில் கடந்த 14 நாளில் 10 கொலைகள்! கொலை நகரமாக மாறி வரும் தலைநகரம் title=

சென்னை க்ரைம் நியூஸ்: தமிழகத்தின் தலைநகர் சென்னையின் புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் கடந்த 30-ஆம் தேதி பதவியேற்றார். அன்று முதல் இன்று வரை 14 நாட்களில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆங்காங்கே வழிப்பறி சம்பவங்களும், பட்டபகலில் கொலை சம்வங்களும் அரங்கேறிவருவதால் பொவருகிறது் அச்சத்தில் இருந்து வருகின்றனர் எங்கு என்ன ஆகுமோ எங்கு படுகொலைகள் படிப்பறிகள் கொள்ளை சம்பவங்கள் நடைபெறும் என்ற அதிர்ச்சியை நோக்கி காத்திருக்க கூடிய அவலமான சூழ்நிலை இருந்து வருகிறது.

தலைநகரமான சென்னை கொலை நகரமாக மாறி வருகிறது:

சென்னையை பொறுத்தவரையில் ரவுடிசம் என்ற ஒன்றிற்கு இடம் கிடையாது. ரவுடிசம் இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவை முற்றிலுமாக ஒடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்து இருந்தார். ஆனாலும், சந்தீப் ராய் ரத்தோர் சென்னை போலீஸ் கமிஷனராக பதவியேற்ற 14 நாளில் நேற்று வரை  சென்னையில் மட்டும் 10 கொலைகள் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகரமான சென்னை தற்போது கொலை நகரமாக மாறி வருகிறது.

சென்னையில் அதிகாரிக்கும் கொலை சம்பவங்கள்:

தமிழகத்தின் டிஜிபியாக பொறுப்பேற்ற சங்கர் ஜீவன் சென்னை பெருநகர காவல் ஆணையராக பதவியேற்ற சந்திப்பாய் ரத்தோத் கடந்த ஜூன் மாதம் 30 ஆம்  தேதி இரவு கிண்டி மடுவங்கரை வண்டிக்காரன் தெருவில் ஆட்டோ டிரைவர் தினேஷ் என்பவரை பொதுமக்கள் முன்னிலையில் விரட்டி சென்று ஒரு கும்பல் சூப்பர் மார்கெட் ஒன்றில் வைத்து   கதற கதற வெட்டி கொலை செய்தது. மேலும் எங்களை கொலை செய்வான் எனக்கூறினான் அதனால் நாங்கள் கொலை செய்தோம் என கூலாக போலீசாரிடம் தெரிவித்த வீடியோ வைரலானது. இந்த கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியேவந்த 5 மணி நேரத்தில் மீண்டும் கொலை செய்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க - மகனின் கல்லூரி கட்டணம் செலுத்த தனது உயிரை தியாகம் செய்த தாய்..!

அதே நாளில், அன்றிரவு கோயம்பேடு காவல் நிலையம் அருகே ஆம்னி பேருந்து நடத்துனர் ரவிசந்திரன் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். பாலியியல் தொழிலுக்கு தொல்லை கொடுத்ததால் அடித்து கொன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இந்த கொலை வழக்கில் திருநங்கைகள் உட்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 1 ஆம் தேதி, திருவொற்றியூரில்  வாடகை வீட்டுக்காரர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாடியில் இருந்து பெண் ஒருவர் கிழே தள்ளி விடுபட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் ஜூலை 10 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்காக மாற்றி இந்த வழக்கில்  ஒருவர்  கைது செய்தனர்.

ஜூலை 3 ஆம் தேதி, வேளச்சேரியில் கள்ளத்தொடர்பில் பிறந்தபச்சிளங் குழந்தையை ஏரியில் வீசி படுகொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். 

ஜூலை 5 ஆம்  தேதி, கந்தன் சாவடியை சேர்ந்த இளம்பெண் பிரீத்தி ரயிலில் பயணம் செய்யும் போது செல்போன் வழிப்பறி கும்பலால் தள்ளிவிடப்பட்டு பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 8 ஆம் தேதி உயிர் இழந்தார். இதில் இருவரை ரயில்வே போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.  பல கனவுகளோடு இருந்த இளம்பெண்ணை வழிப்பறி கொள்ளையர்கள் கஞ்சா அடிக்க பணம் இல்லாததால் செல்போனை பறிக்க அப்பொழுது இளம்பெண் உயிர் இழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் பெண்கள் வெளியே வருவதற்கு அச்சப்படக்கூடிய நிலை சென்னையில் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க - பழம் விற்ற பெண் வெட்டி கொலை! ரயில் நிலையத்தில் கொடூரம்

ஜூலை 10 ஆம் தேதி இரவு, மயிலாப்பூரில் டோக்கன் ராஜா  என்ற ரவுடி பொதுமக்கள் முன்னிலையிலே ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார். தந்தை கொலைக்கு பழி தீர்க்க 20 ஆண்டுகள் கழித்து பழிக்குப்பழி நடந்த இச்சம்பவத்தில் இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஜூலை 11 ஆம் தேதி, வில்லிவாக்கத்தில்  பட்டப் பகலில் காவல்நிலையம் அருகேவே கல்லறை அப்பு என்ற ரவுடி  வெட்டியும், தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். கொலை செய்வதற்கு முன் இரண்டு நாட்களாக அப்பு கத்தியை வைத்து பலரை மிரட்டி வந்துள்ளான். அப்பொழுதே போலீசார் நடவடிக்கை எடுத்து இருந்தால் கொலையை தடுத்து இருக்கலாம். இந்த கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 11 ஆம் தேதி இரவு, பழைய வண்ணாரப்பேட்டையில் குடிப்போதையில் தந்தை வீரமுத்துவை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மகன் குமார் கைது செய்யப்பட்டார்.

ஜூலை 13 ஆம்  தேதி, திருமங்கலத்தில் மாந்தீதக செயல்களில் ஈடுப்பட்டு வந்த சையது சிக்கந்தர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில்  கொலையாளிகள் கொலை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அன்று இரவே மதுரைக்கு சென்று மறுநாள் காலை மதுரை நீதிமன்றத்தில் சர்வ சாதாரணமாக சரணடைந்ததுள்ளனர் பல கொலை சம்பவங்கள் சிறையிலேயே திட்டம் தீட்டப்பட்டு அரங்கேற்றப்பட்டு அதே குற்றவாளிகள் காவல் துறையினருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நீதிமன்றங்களில் சரணடைவது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது இதுதான் விடியா திமுக அரசின் காவல்துறையின் கையாலாகாத செயலாக பார்க்கப்படுகிறது

மேலும் படிக்க - விருதுநகரில் சிறுவனுக்கு நடந்த கொடுமை! ஓராண்டுக்கு பின் காத்திருந்த ட்விஸ்ட்!

ஜீலை 13 ஆம் தேதி, கிண்டியில் மதுபோதையில் தகராறில் ஈடுப்பட்ட தந்தை பாலசுப்பரமணியனை, கிரிக்கெட் மட்டை மற்றும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த ஜெபரீஷ் என்ற 23 வயது மகன் கிண்டி காவல் நிலையத்தில் சரணடைந்தான்.  கொலை நடைபெற்ற சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை காவல்துறை உரிய முறையில் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருக்காது

பதற வைக்கும் கொலை சம்பவங்கள் மட்டுமல்லாமல் கடந்த 8 ஆம் தேதி பட்டபகலில் காளை என்ற ரவுடியை சிறுவர்கள் உட்பட 4 பேர் சேர்ந்து கொடூரமாக வெட்டி சாய்த்தனர். தங்களை அடித்து துன்புறுத்தியதால் 17 வயது சிறுவர்கள் கையில் கத்தி ஏந்தி ரவுடியை சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ஆபத்தான நிலையில் ரவுடி சிகிச்சை பெற்று வருகிறான்.

ஜீலை 9 ஆம் தேதி  சென்னை எம்.கே.பி. நகரில் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அலெக்ஸ் என்ற 18 வயது சிறுவன் கொடூரமாக வெட்டப்பட்டு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றான்..

அதே நாளில் புளியந்தோப்பில் அக்கா மகளை காதலிப்பதாக தொந்தரவு செய்வர்களை கண்டித்த வழக்கறிஞர் தமிழ்செல்வன் என்பவரை 16 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் கொடூரமாக கத்தியால் தாக்கியுள்ளனர். 

சென்னை நந்தம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி முதலாம் ஆண்டு மாணவியை பொதுமக்கள் முன்னிலையில் பட்டபகலில் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய நவீன் என்பவனை போலீசார் கைது செய்தனர். கல்லூரி மாணவி இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க - சைதாப்பேட்டையில் பயங்கரம்..! ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண்..!

ஜூலை 8 ஆம்  தேதி இரவு புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 26). பிரபல ரவுடியான இவர், நேற்று இரவு தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு வந்த போது, அவரை வழிமறித்து கத்தியால் தமிழரசனை ஓட, ஓட விரட்டி வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த வழக்கில் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். ரவுடி தமிழரசன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேநாளில், கோயம்பேடு மார்க்கெட்டில் மது வாங்கி தர மறுத்த கல்லூரி மாணவரை வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் அதிகரிப்பு:

கடந்த ஜூலை 9 ஆம் தேதி இரவு, ராயபுரத்தில் கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்த சிறுவனுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில், பெட்ரோல் குண்டு வீசிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

அதேநாளில், சென்னையை அடுத்த பெருங்குடி திருவள்ளுவர் நகர் 5-வது தெருவில் வசிக்கும் காதலி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க - யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்: முக ஸ்டாலின்

அந்த பெண் தன்னை திடீரென காதலிக்க மறுத்துவிட்டார். ஆத்திரமடைந்த நான், அந்த பெண்ணை கொலை செய்வதற்காக அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினேன் என்று கைதான சூர்யா போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

மேலும், ஜூலை 11 ஆம் தேதி பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் பா.ம.க. வடசென்னை மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது மகன் நிஷாலை கொலை செய்வதற்கு,  சத்யநாராயணனின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் அவரது வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டை வீசினர். இச்சம்பவத்தில், 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் அதிகமாக இருந்து வரும் நிலையில், சென்னையிலும் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் உருவாகத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் சிறுவர்கள் போதை பழக்கத்தினால் அடிமையாகி அவர்களை ரவுடி கும்பல் பகடை காயாகும் பயன்படுத்தி கொலை சம்பவங்களை அரங்கேற்றி வருவது அதிகரித்து வருகிறது.

போதையாலும், பழிக்குப்பழியாகவும் கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் அதிகளவில் நடந்துள்ள நிலையில் புதிய காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் பொறுப்பேற்ற 15 நாட்களில் 10 கொலைகள் அரங்கேறியிருக்கிறது கொலை மட்டும் இல்லாமல் கொள்ளை வழிப்பறிவு செயின் பறிப்பு உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களும் அரங்கேறிவருகிறது. இந்த சம்பவங்களால் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

(தகவல்: செய்தியாளர் தமிழரசன்) 

மேலும் படிக்க - மோசடி செய்த நயினார் நாகேந்திரன் மகன்! 100 கோடி மதிப்பிலான பத்திரபதிவு ரத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News