1,000க்கும் மேற்பட்டவர்கள் - தொடங்கப்பட்டது வேலை வாய்ப்பு பயிற்சி அகாடமி

Senx academy  மற்றும் Laksh institute இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்காக வேலை வாய்ப்புடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அகாடமி தொடங்கப்பட்டது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 18, 2022, 03:26 PM IST
  • இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு அகாடமி தொடங்கப்பட்டுள்ளது
  • கடந்த 15ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது
  • சென் எக்ஸ், லக்‌ஷ் ஆகிய நிறுவனங்கள் இதனை தொடங்கியுள்ளன
 1,000க்கும் மேற்பட்டவர்கள் - தொடங்கப்பட்டது வேலை வாய்ப்பு பயிற்சி அகாடமி title=

வெள்ளி வென்ச்சர்ஸ், Laksh Source business solutions மற்றும் ICCDF இணைந்து பிரம்மாண்டமான B2B Beginner to Billionaire நிகழ்ச்சி வெளியீட்டு நிகழ்வை ஜூலை 15, 2022 அன்று காரப்பாக்கத்தில் உள்ள VV அலுவலகத்தின் கலையரங்கத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி வள்ளியப்பனால் தொடங்கி வைக்கப்பட்டது. Laksh institute மற்றும் செனக்ஸ் அகாடமியின் படிப்பு மற்றம் பயிற்சிகளை அறிமுகப்படுத்தும்  விழாவாக நடந்தேறியது. இத்துணை வருடங்களாக லக் ஷ்நிறுவனத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் தகவல் ஆணையம் கமிஷனர் மூலம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

பிபிஓ & கேபிஓவுக்கென்றே பிரத்யேக படிப்புகளை  லக்‌ஷ் பயிற்சியகம் (Laksh Institute) மூலம் வழங்குகிறது. இந்நிறுவனம் மெடிக்கல் கோடிங் மற்றும் நிதித்துறையில் சிறப்புப் பயிற்சியை வேலை வாய்ப்புடன் வழங்குகிறது. 70% பெண் பணியாளர்கள் உடைய லக்‌ஷ் நிறுவனம், பெண்கள் மற்றும் வேலை  தேடும் இளையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றது உரிமையாளர் சோமசுந்தரம் தெரிவித்தார்.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் : தனியார் பள்ளி மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

இந்நிகழ்வில் லக்‌ஷ் பயிற்சியகம் மற்றும் சென் எக்ஸ் அகாடமி என்ற இரண்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சென் எக்ஸ் அகாடமி பற்றி அதன் தலைமை பொறுப்பாளர் கவிதா செந்தில்நாதன், “சென் அகாடமி என்று அழைக்கப்பட்ட சென் எக்ஸ் அகாடமி கடலூரில் அதன் தலைமை அலுவலகத்துடன் 3 ஆண்டுகள் செயல்பட்டது. சென் எக்ஸ் அகாடமி ஃபேஷன், திரைப்படவியல், தொழில்முறை பராமரிப்பு, கார்ப்பரேட் பயிற்சி மற்றும் பலவற்றின் கீழ் பரந்த அளவிலான படிப்புகளைக் கொண்டுள்ளது என்றார். 

வெள்ளி வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பது தொழிலதிபர்களை உருவாக்கும் நிறுவனம். இது இளம் மற்றும் வளரும் ஸ்டார்ட்அப்களுக்கு நிதியளித்து, வழிகாட்டி மற்றும் திறம்பட செயல்பட வழிவகுக்குகிறது. வெள்ளி வென்ச்சர்ஸ் மற்றும் சென் எக்ஸ் நிறுவனர்கள் பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் ஒரே மாதிரியான நோக்கத்தைக் கொண்டிருந்ததால், வெள்ளி வென்ச்சர்ஸ், சென் எக்ஸ் அகாடமியின் பிறப்பிற்கு வழிவகுத்தது. இப்பொழுது சென்எக்ஸ் அகாடமியின் தலைமை அலுவலகம் சென்னை, காரப்பாக்கத்திலும், கிளை அலுவலகம் புதுச்சேரியிலும் உள்ளது 

வெள்ளி வென்ச்சர்ஸ் நிறுவனர் ஷர்மிளா பேசுகையில், “ லக்‌ஷ் பயிற்சியகம் BPO & KPO  இன்டஸ்ரியில் புதிய வேலை வாய்ப்பு பட்டறை ஆகவும், மேலும் லக்‌ஷ் பயிற்சியகம் மற்றும் சென் எக்ஸ் அகாடமி தொழில் அதிபர்களை உருவாக்கும் பயிற்ச்சியகமாகவும் விளங்கும் என்றார். 

லக்‌ஷ் மற்றும் சென் எக்ஸ் பயிற்சியகம், மாணவர்களுக்குத் தேவையான திறன்களை மேம்படுத்துவதற்கும், அவர்களின் நிபுணத்துவப் பகுதியில் வேலைவாய்ப்புகளை அவர்களுக்கு உறுதி செய்வதற்கும் உதவும் என்றார் .

மேலும் படிக்க | தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் வரலாறும் பிண்ணனியும்: அண்ணா பெரியார் கலைஞர் கருணாநிதி

இந்தியா டர்ன்ஸ் நிறுவனர் ஆனந்தகுமார் கூறுகையில், இந்நிறுவனங்கள் மாணவர்களை சுயதொழில் செய்ய தொழில்முனைவோர்களாக  பயிற்சியளித்து, அதன் மூலம் தங்கள் சொந்த வணிகம்  தொடங்குவதற்கு வழிவகுக்கும். Beginner to Billionaire நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே இம்மாதிரி முன்னேற்ற பாதையில் செல்லும் நிறுவனங்களுக்கு வழிகாட்டி மற்றும் சிறந்த ஆதரவை வழங்குவதே என்றார்.

மேலும் லக்‌ஷ் பயிற்சியகம் Founder Mr N. Somasoundaram கூறுகையில் இந்நிறுவனங்கள் கூட்டு முயற்சியாக குறைந்தபட்சம் 1000 மாணவர்களுக்கு தங்கள் பயிற்சியகம் மூலம் Project 2022 திட்டத்தின் வாயிலாக இவ்வாண்டிற்குள் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News