கரூரில் பேட்டியளித்த ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள், அதிமுக, திமுகவை சார்ந்த முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி, 2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் என கூறினார். பிரதமர் மோடி இன்னும் 25 ஆண்டுகள் பிரதமராக இருக்க வேண்டும் எனக் கூறி கரூரில் யாகம் செய்வதற்காக இடம் தேர்வு செய்ய வந்ததாக தேனி கூடலூரை சார்ந்த மடாதிபதி இவ்வாறு கூறினார்.
கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தேனி மாவட்டம் கூடலூர் ஸ்ரீ மகா சக்தி பீடம் மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தஞ்சை பெரிய கோவிலினை கட்டியமைத்த சித்தர் கரூராரின் தலைமையில் கும்பாபிஷேகம் நடத்தாததால் அவர்களின் குடும்பமே அழிந்து விட்டது. அவரது சமாதியுள்ள கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ள மண்ணில் 125 வருசத்துக்கு ஒரு முறை மாற்றம் வரும்.
காவிரி மற்றும் அமராவதி ஆறு சங்கமிக்கும் திருமுக்கூடலூர் கிராமத்தில் யாகம் நடத்துவதற்காக இடம் தேர்வு செய்ய வந்துள்ளதாகவும், அடுத்து 25 ஆண்டுகளுக்கு மோடி பிரதமராக இருக்க வேண்டும், நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அசுவமேத ராஜபிரம்ம யாகம் நடத்த இருப்பதாகவும், நாள் குறிப்பிடதா நிலையில், பிரதமரை பங்கேற்க வைக்க இருப்பதாக தெரிவித்தார்.
அதிமுகவை சார்ந்த எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், திமுகவை சார்ந்த துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய சீனியர் அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி, அவர்கள் சிறையிலேயே வாழ்நாளை முடித்துக் கொள்வார்கள். 2026ல் திமுக, அதிமுகவை தவிர்த்து பாஜக சிறு கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும், ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி, அண்ணாமலை முதலமைச்சர் ஆவார். நடிகர் விஜய் உள்ளிட்டோர் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை" என்றார்.
மேலும் படிக்க | கோவை திமுக மேயர் திடீர் ராஜினாமா? அடுக்கடுக்காக தலைமைக்கு சென்ற புகார் பின்னணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ