இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பிரிவு, அண்ணன் - தம்பி பிரிவு போலத்தான் - செல்லூர் ராஜூ ஃபீலிங்ஸ்!

Sellur Raju Feelings :  இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பிரிவு, அதிமுக தொண்டர்களிடையே என்னவிதமான சலனத்தை ஏற்படுத்தியுள்ளது ? தற்போது தொண்டர்களை சமாதானப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அதிமுக பிரமுகர்கள் எடுத்து வருகின்றனர். அதில் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி கொஞ்சம் வித்தியாசமானது.!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jul 22, 2022, 05:56 PM IST
  • ‘இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் சண்டை அண்ணன் தம்பி சண்டை’
  • மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டி
  • ஓ.பி.எஸ் மனம் திருந்திவந்தால் ஏற்போம் - செல்லூர் ராஜூ
இ.பி.எஸ், ஓ.பி.எஸ் பிரிவு, அண்ணன் - தம்பி பிரிவு போலத்தான் - செல்லூர் ராஜூ ஃபீலிங்ஸ்! title=

செல்லூர் ராஜூ என்றாலே சட்டப்பேரவை முதல் மீம் கிரியேட்டர்கள் வரை கலகலப்புதான். தெர்மாகோல் சம்பவத்தில் இருந்து பிரபலமடைந்த மனிதர், சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தொடரிலும் வைரலானார். கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை என்று வருத்தம் தெரிவித்தார். 

அப்போது இடைமறித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜூ என்பது நாட்டுக்கே தெரிந்த ஒன்று என்று நகைச்சுவையாக கூற சட்டப்பேரவையில் இருந்த அனைத்து கட்சி உறுப்பினர்களும் கட்சிப்பாகுடின்றி குலுங்கிக் குலுங்கி சிரித்து ரசித்தனர்.

மேலும் படிக்க | சோதனை மேல் சோதனை - அதிமுக அலுவலகத்துக்குள் சென்ற இபிஎஸ் தரப்புக்கு அடுத்த அதிர்ச்சி

அதிமுகவின் ஒற்றைத் தலைமை புயலில் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்த செல்லூர் ராஜூ, அவ்வப்போது ஒற்றைத் தலைமைக் குறித்து கருத்துக்களைக் கூறி வந்தார். தற்போது பிரச்சனை ஓரளவு முடிந்த பின்பு, மீண்டும் மதுரையில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் குறித்து பேசியுள்ளார். 

மதுரை சிக்கந்தர் சாவடி, கோவில்பாப்பாகுடி பகுதிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளி கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், தேர்தல் நேரத்தில் மட்டும் இந்து மதத்தை நேசிப்பது போல திமுகவினர் செயல்படுவார்கள் என்றும், கடந்த ஓராண்டில் சிறுபான்மை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார். எல்லாம் ஒட்டு வாங்க மட்டும்தான் என்றும் செல்லூர் ராஜூ கூறினார். 

இனி அவரது குரலிலேயே கேட்கலாம். 

‘பிரதமரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இந்தியா ஒரு வல்லரசு நாடாக முன்னேறி கொண்டிருக்கிறது. அப்துல் கலாமின் கனவை நோக்கி பாஜக அரசு முன்னேறிச் செல்கிறது. எனவே மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக வர வேண்டும்.

இரட்டை குதிரையில் சவாரி செய்வது முடியாது ஒன்று. ஒற்றை மனிதரின் அதிகாரத்தில் கட்சியைக் கொண்டு வந்துள்ளோம். ஒரு தொண்டன்கூட கட்சியில் இருந்து செல்ல கூடாது என்பதே எங்கள் விருப்பம். 
காளிமுத்து, ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் எல்லோரும் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டு திரும்பியவர்கள் தான்.  

மேலும் படிக்க | அதிமுக அலுவலகத்தில் காணாமல் போன பொருட்கள் - ஓ.பி.எஸ் மீது பழிபோடுகிறதா இ.பி.எஸ் தரப்பு ?

எனவே, எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் பிரிவும் அண்ணன் தம்பி போராட்டம் போலத்தான். ஓ.பன்னீர்செல்வம் மனம் திருந்தி வந்தால் நிச்சயம் ஏற்போம். ஜி.எஸ்.டி வேண்டாம் என்று சொல்லிவிட்டு பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி கேட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்’

என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News