தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசித்து வருகிறோம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் (Tamil Nadu), வழக்கமான நடைமுறையில், கோடை விடுமுறை முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படும். ஆனால், இந்த ஆண்டும், சென்ற ஆண்டை போலவே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
ALSO READ | தமிழக பள்ளிக் கல்வித்துறை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்நிலையில் தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh) பொய்யாமொழி முக்கிய அறிவிப்பை அளித்துள்ளார். அதன்படி., தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தி வருவதாகவும், இது குறித்த அறிவிப்பை தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
மேலும் சிஎஸ்ஆர் சமூக பொறுப்பு நிதி மூலம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இதனால் பொது முடக்கத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே பள்ளிகள் திறப்பு குறித்து அரசு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஓவடியா விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
ALSO READ | புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா.. அரசு கூறுவது என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR