செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இந்துசமய அறவிலையத்துரறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொள்வதற்காக வந்திருந்தனர். ஆய்வு மேற்கொண்டிருந்த போது அதிகாலை முதல் பேருந்து கிடைக்காமல் கொட்டும் பணியில் காத்திருப்பதாக திருவண்ணாமலை செல்லும் பெண் பயணிகள் அமைச்சர்களை முற்றுகையிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டதால் பதிலளிக்க முடியாமல் தப்பியோடினர். போலீசார் அவர்களை வழிமறித்து சமரசம் பேசி சமாளித்தனர் இச்சம்பவம் பேருந்து நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
இதன் பின்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோர் நிருபர்களிடம் கூட்டாக சேர்ந்து பேட்டியில் கூறுகையில், தாம்பரம் அடுத்த முடிச்சூரில் ரூ. 27 கோடி மதிப்பீட்டில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் 150 பேருந்துகள் நிற்கும் வசதி, 300 பேர் தங்கும் வசதி, உணவகம், கழிப்பிடம், அலுவலக அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக 5 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதலாக தேவைப்படும் வசதிகள் என்னென்னவென்று இன்று காலை ஆய்வு செய்தோம். அங்கு உயிரெழுத்து மின் கம்பிகள் அகற்றுப்பணி கால தாமதமானதால் பணி மந்தமாக நடைபெற்று வந்தது ஆனால் மேற்படி பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளோம்.
வருகிற ஏப்ரல் மாதம் இறுதிக்குள் பணி நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம். மேலும் கலைஞர் நூற்றாண்டு முனையத்திலிருந்து தினந்தோறும் 585 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் திருச்சிக்கு மட்டும் 13 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் விடுமுறை தினங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களை கருத்தில் கொண்டு 70 பேருந்துகளை கூடுதலாக இயக்க திட்டமிட்டோம், ஆனால் பயணிகளின் வருகை அதிகரித்ததால் 150 பேருந்துகளை கூடுதலாக இயக்கி உள்ளோம். இதில் பஸ் டிரைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகதான் இரவு 10 மணிக்குள் தொலைதூர பயனுகளுக்காக பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. இதில் இரவு 11 மணிக்கு மேல் பேருந்துகள் கேட்பது சிரமம். இதில் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு கடந்த இரு நாட்களில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பயணிகள் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதில் வேண்டுமென்று எதிர்க்கட்சி தலைவர்கள் தேவையற்ற வதந்திகளை கிளப்பி வருகிறார்கள். இதில் பகல் மற்றும் மாலை நேரங்களில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பேருந்துகள் இயங்குகின்றன. ஆனால் நள்ளிரவில் மட்டும் ஒரே நேரத்தில் 500 பேர் கூடுகின்றனர். இதில் ஆம்னி பேருந்துகளை இயக்குபவர்கள் வேண்டுமென்று குழப்பம் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் நள்ளிரவில் வருபவர்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம் என்றனர்.
மேலும் படிக்க | கோவை: MyV3 Ads செயலி உரிமையாளர் சிறையில் அடைப்பு - வாடிக்கையாளர்கள் பதற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ