கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதில் இருந்து, தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக குறைந்து வருவது சிறிது நிம்மதி அளிக்கும் விஷயமாக உள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு செய்யபட்டு வருகிறது.
இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா (Coronavirus) பாதிப்பு காலக்கட்டத்திலும் உழைத்து வரும் முன் களப்பணியாளர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) ஊக்கத்தொகை அறிவிப்பை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம், முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
ALSO READ | 14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்
இந்நிலையில் தற்போது இதற்கிடையில் தமிழக காவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்று உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது காவல்துறையினர் தங்களது இன்னுரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது இன்றியமையாத பணியினை அங்கீகரிக்கும் விதமாக அவர்களது பணியினை ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையினருக்கு ரூபாய் 5 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR