கன்னியாகுமரி மலைவாழ் மக்களுக்கு ரூ.5,000: முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி கன்னியாகுமரி மலைவாழ் மக்களுக்கு ரூ.5,000 நிவாரண தொகை வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Last Updated : Dec 16, 2017, 08:28 AM IST
கன்னியாகுமரி மலைவாழ் மக்களுக்கு ரூ.5,000: முதல்வர் பழனிசாமி title=

தமிழ்நாடு முதலமைச்சர் மு.பழனிசாமி நேற்று கன்யாகுமரியில் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கும் நிவாரண தொகையை அறிவித்து அறிக்கை வெளியிட்டார். 

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பது; சமீபத்தில் ஏற்பட்ட ‘ஒகி’ புயலினால் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும்பாதிக்கப்பட்டது. மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும்
தமிழ்நாடு அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளின் காரணமாக, மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் சீரமைக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் இயல்பு நிலைக்குதிரும்பியது. 

பாதிக்கப்பட்ட மீனவர் மற்றும் மீனவர் அல்லாத குடும்பங்களுக்கு மாண்புமிகு அம்மாவின் அரசால் உரிய நிவாரணம் அறிவிக்கப்பட்டு, உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் பெருமக்களுக்கும், மீனவர்களுக்கும் பல்வேறு நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், திருவட்டார், பேச்சிபாறை, தோவாளை, தடிக்காரன்கோணம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் கடையால், பொன்மனை ஆகிய பேருராட்சிகளில் உள்ள 1524 மலைவாழ் குடும்பங்கள் ‘ஒகி’ புயலால் தாங்கள் தொழில் செய்ய முடியாத நிலையில், தங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும்பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும்அவர்கள் விடுத்த கோரிக்கை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களின் வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் தற்போது எயதவிதமான தொழிலையும் செய்ய முடியாத நிலைமையையும் கருத்தில் கொண்டு, அம்மக்களுக்கு வாழ்வாதார நிவாரண தொகையாக குடும்பம் ஒன்றுக்கு தலா 5,000/- ரூபாய் வீதம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
என்று குறிப்பிட்டுள்ளார். 

Trending News