சென்னை கீழ்பாக்கத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைந்துள்ள இடத்தின் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சென்னை அண்ணாசாலையில் அவ்வப்போது திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வந்தது. அதாவது கடந்த மார்ச் 9-ம் தேதி அண்ணா சாலை அருகில் சாலையில் திடீர் பள்ளம் விழுந்தது. இந்தப் பள்ளத்தில், அரசுப் பேருந்தும், ஒரு காரும் சிக்கிக்கொண்டன.
இந்நிலையில், இன்று காலை கீழ்ப்பாக்கம் சாலையிலும் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகளின் காரணமாக, இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் வேகமாக செயல்பட்டு சிமெண்ட் கலவை கொண்டு பள்ளத்தை மூடி உள்ளனர்.
சென்னையில் பள்ளம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் பெரும்பரபரப்பு மற்றும் அச்சத்தைக் ஏற்படுத்தியுள்ளது.