ஆர்கேநகர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டி

ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். 

Last Updated : Mar 15, 2017, 11:06 AM IST
ஆர்கேநகர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டி title=

சென்னை: ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். 

வழக்கறிஞரான மருது கணேஷ் ஆர்கேநகரில் பகுதி செயலாளராக இருக்கிறார். 

முன்னதாக ஆர்கேநகர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டும் அதிமுக வேட்பாளராக டி.டி.வி தினகரன் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதையடுத்து ஆர்கேநகர் தொகுதி காலியாக இருந்தது.

கடந்த 3 மாதமாக காலியாக இருந்த இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. 

இந்நிலையில் ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். 

Trending News