தமிழகத்தில் இன்றும், நாளையும் ரெட் அலர்ட்: வானிலை மையம் வார்னிங்

தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 3, 2022, 12:03 PM IST
  • பல்வேறு இடங்களில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு
  • தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்தது
  • 94 சதவீதம் அதிகமாக மழை பதிவு
தமிழகத்தில் இன்றும், நாளையும் ரெட் அலர்ட்: வானிலை மையம் வார்னிங் title=

தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை தொடரும். கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள் உட்பட இந்தியாவின் தெற்கு தீபகற்பத்தில் இந்த வாரம் மிக கனமழை நீடிக்கும்.ஆகஸ்ட் 3 மற்றும் 4 தேதிகளில் பெங்களூரில் மிதமானது முதல் கனமழை பெய்யும்.

நாட்டின் மத்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 5 முதல் மத்திய மற்றும் வட மாநிலங்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய தலைநகரில் புதன்கிழமை லேசான மழை பெய்யும், அதே நேரத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

மேலும் படிக்க | அமீரக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

Chennai Metrorological

தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், கிழக்கு உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம், அந்தமான், நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், அசாம் , மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் , திரிபுரா, தெலுங்கானா, ராயலசீமா, வடக்கு கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். இந்த பகுதிகளுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது,'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Bank Holidays In August 2022: வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் விடுமுறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News