CM Stalin in Governor Tea Party: தமிழ்நாட்டில் ஆளும் திமுக தரப்புக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நீண்ட நாளாக கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. தொடர்ந்து, ஆளுநரின் பேச்சுகளை திமுகவினர் சர்ச்சையாக்கி வந்த நிலையில், தமிழ்நாடு குறித்து அவர் பேசியிருந்தது பரந்த அளவில் எதிர்ப்பை சம்பாதித்தது.
அந்த சர்ச்சையை அடுத்து, ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் ஆளுநர் உரை அனைத்து பிரச்சைகளுக்கும் உச்சமாக அமைந்தது. ஆளுநரின் உரையில், அரசால் அச்சடித்து கொடுக்கப்பட்ட சில வார்த்தைகளை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் பேசியதாக கூறி, அரசு அச்சடித்த ஆங்கில உரையும், சபாநாயகர் அவையில் ஆற்றிய தமிழாக்க உரையும்தான் அவைக்குறிப்பில் ஏறும் என்று முதலமைச்சரால் அப்போதே தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அப்போது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறியது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரை எதிர்த்து போராட்டமும் நடத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.
மேலும் படிக்க | ஆளுநர் தேநீர் விருந்து: அமைச்சர்களுடன் பங்கேற்ற ஸ்டாலின்... இபிஎஸ் ஓபிஎஸ் ஆப்சென்ட்
அதை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என். ரவி மீதான புகார் கடிதத்தை திமுக எம்.பி.,கள் குடியரசு தலைவரிடம் அளித்தனர். அதனை குடியரசு தலைவர் மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் டெல்லிக்கு விரைந்தார். டெல்லியில் இருந்து வந்த பின், ஆளுநரின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் இருந்ததாக தெரிந்தது.
அந்த வகையில், குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி முறைப்படி அழைப்புவிடுத்தார். திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் சிலருடன் அன்றைய தேநீர் விருந்தில் கலந்துகொண்டது அரசியல் தளத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்டது.
இவருக்கும் இடையேயான மோதல் போக்கு தணிந்துவிட்டதா என்றும் பலரும் தங்களது அவதானிப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்துகொண்டதற்கான காரணம் குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்கப்பூர்வமான அரசின் செயல்பாடுகள் தேக்கநிலை அடைய வேண்டும் என்பதற்கு ஆளுநரும் இடம் கொடுக்கவில்லை. தேநீர் விருந்துக்கான அழைப்பிதழில் 'தமிழ்நாடு' என்ற அரசமைப்புச் சட்ட ரீதியான பெயரை பதிவு செய்ததுடன், முதலமைச்சருக்கு அழைப்பிதழை முறைப்படி அனுப்பி, தொலைப்பேசியில் முதல்வருடன் பேசி அழைப்பு விடுத்தார். முதல்வரும், மற்றெல்லாப் பிரச்சினைகளிலும் கையாளும் பெருந்தன்மையுடன் கூடிய மென்மையான அணுகுமுறையையே குடியரசு நாளையொட்டிய நிகழ்வுகளிலும் பின்பற்றினார்.
முதலமைச்சர், மோதல்களைத் தவிர்ப்பவரே தவிர, மோதலுக்குத் தயாராக இருப்பவர் அல்ல. எப்போதும் அவரது கண்களுக்குத் தெரிவதெல்லாம் சீரான ஆட்சி நிர்வாகம் மற்றும் வெகுமக்களுக்கு நாளும் ஆற்ற வேண்டிய நற்பணிதான்" என தனியார் நாளேடை விமர்சித்து, முரசொலியில் எழுதப்பட்ட ஒரு சிறு பத்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்மூலம், முதலமைச்சர் - ஆளுநர் மோதல் போக்கு மறைந்து, அரசியல் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | மோடி பிபிசி ஆவணப்படம்: மொபைலில் பார்த்த பெண் கவுன்சிலர் - டக்கென பிடித்த போலீசார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ