இனி ரேஷன் பொருட்கள் வாங்க புதிய நடைமுறை - தமிழக அரசு அறிவிப்பு!

தேர்தல் அறிக்கையை தெரிவித்தது போன்று குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 15 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 17, 2023, 08:42 AM IST
  • தேர்தல் அறிக்கைகளை அரசு நிறைவேற்றி வருகிறது.
  • 14 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.
  • நகல் பெறுவதற்கு தபால் துறை மூலம் விண்ணப்பித்தாலே போதும்.
இனி ரேஷன் பொருட்கள் வாங்க புதிய நடைமுறை - தமிழக அரசு அறிவிப்பு! title=

இன்னும் இரண்டு மாதத்தில் அனைத்து நியாய விலை கடைகளிலும் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் என சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.  சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.  அப்போது சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடு மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பணிகள், பயனாளிகள் விபரம் மற்றும் பொது விநியோக முறையில் உள்ள குளறுபடிகள் குறித்து தனித்தனியே ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க | செய்தியாளர் கேள்விக்கு ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என பதிலளித்த பாஜக எல்.முருகன்!

தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போன்று பொது விநியோகத் திட்டத்தை சீரமைத்து மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அனைத்தும் நியாய விலை கடைகளிலும் கருப்பு மற்றும் பழுப்பு அரிசிகளை நீக்கி தரமான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை தெரிவித்தது போன்று குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 15 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அதன்படி இதுவரை 14 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும் குடும்ப அட்டை நகல் பெறுவதற்கு தபால் துறை மூலம் விண்ணப்பித்தாலே போதும். ஆன்லைன் மூலம் குடும்ப அட்டை நகல் வழங்கும் சிறப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தற்போது பொது விநியோக கடைகளில் பயோமெட்ரிக் முறை அவ்வப்போது செயல் இழப்பதால் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வந்த புகாரினையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் இரண்டு மாதத்திற்குள் 36,000 ரேஷன் கடைகள் மூலம் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  தொடர்ந்து அவர் பேசும்போது ரேஷன் கடைகளுக்கு வர முடியாத மாற்றத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் 3 லட்சம் பேருக்கு இருக்கும் இடத்திலேயே ரேசன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தை பொறுத்தமட்டில் 103 திறந்தவெளி நெல் அடுக்கு மையங்கள் தற்போது பாதுகாக்கப்பட்டு 211 இடங்களில் குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பெட்டில் 4 லட்சம் மெட்ரிக் டன் உணவு பொருட்கள் அடுக்கி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | குழந்தை விற்பனை புரோக்கர்.. பெண் மருத்துவர் கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News