அரசியல்வாதிகளை விட, இளைஞர்கள் அரசியல் பற்றி தெரிந்துள்ளனர்: ஸ்டாலின்

சங்கரன்கோவிலில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார் ஸ்டாலின்....

Last Updated : Jan 6, 2019, 05:31 PM IST
அரசியல்வாதிகளை விட, இளைஞர்கள் அரசியல் பற்றி தெரிந்துள்ளனர்: ஸ்டாலின் title=

சங்கரன்கோவிலில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார் ஸ்டாலின்....

பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் பிறந்தநாட்களை முன்னிட்டு, மாணவ, மாணவிகளுக்கு இதுவரை 7 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள அரசியல்வாதிகளை விட, இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு அரசியலை அதிகமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் வந்து சேர்ந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற தூய உள்ளத்தோடு, திமுக இளைஞர் அணி சார்பில் அறக்கட்டளை தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு, முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், 2-வது பரிசாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும், 3-வது பரிசாக 2 ஆயிரத்து 500 ரூபாயும், 10 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய மு.க.ஸ்டாலின், மாவட்ட அளவில் முதல் 2 இரு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் விளக்கினார்.

பின்னர் மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுவதாக கூறிய மு.க.ஸ்டாலின், கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் 8ஆண்டுகள் பரிசுகள் வழங்கப்படுவதாக கூறினார்.

பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு இதுவரை மொத்தம் 7 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Trending News