ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை சென்று வந்த நபர் வெட்டிப்படுகொலை! நடந்தது என்ன?

Crime News in Tamil: ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த வாரம் சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரணை செய்யப்பட்ட பாமக நிர்வாகி பிரபாகரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கொலை செய்யப்பட என்ன காரணம்? 

Written by - Bhuvaneshwari P S | Edited by - Shiva Murugesan | Last Updated : Dec 12, 2023, 01:26 PM IST
ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை சென்று வந்த நபர் வெட்டிப்படுகொலை! நடந்தது என்ன? title=

Latest News on Trichy Crime: திருச்சி வள்ளுவன் நகரை சேர்ந்தவர் பிரபு என்கின்ற பிரபாகரன். இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரே தனியார் ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.  பிரபாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் திருச்சி காவல் நிலையத்தில் நிலுவையில்  உள்ளன. அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் உள்ளார். பாமக கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருந்த இவர் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரில் கைதாகி சிறை சென்ற பிரபாகரன் நிபந்தனை பிணையில் வெளியே வந்தார். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் நேற்று இரவு 7  மணி அளவில் ஆஜராகி கையெழுத்திட்டுள்ளார். அதன்பிறகு அரசு மருத்துவமனை அருகில் உள்ள தனது அலுவலகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். 

மேலும் படிக்க - மாமியாரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மருமகள்! அதிர்ச்சிப் பின்னணி!

அப்போது முககவசம் அணிந்து கொண்டு இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 3  பேர் பிரபாகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் கொலையாளிகள் மூன்று  பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுப்பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலை நடந்த அலுவலகத்தில் மாநகர காவல் துணை ஆணையர் அன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் கைரேகை மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டது. மேலும் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக இவரிடம் கடந்த சனிக்கிழமை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் நாளை மறுநாள் மீண்டும் ராமஜெயம் வழக்கில் விசாரணைக்கு இவர் ஆஜராக இருந்த நிலையில், இவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் பிரபாகரன் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை மாநகர காவல் துணை ஆணையர் அன்பு கைப்பற்றி விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் , பஷீர், ரியாஸ் ராஜேஷ் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் மாதவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பைலட் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அப்பு என்கின்ற ஹரிஹரன் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை 12 ஆண்டுகளாக பிடிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவாய் ராமஜெயம் வழக்கு குறித்து விசாரணைக்கு சென்று வந்த பிரபாகரன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

மேலும் படிக்க - ஈரோடு: காதல் திருமணம் செய்த இளம் பெண் இறப்பு - கணவர் குடும்பத்தார் மீது சந்தேகம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News