தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலையை முற்றிலுமாக மாற்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாவட்டம் தோறும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் தொழிலாளர் நலன் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் குறிப்பாக மென்பொருள் நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்று சுமார் 70 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய வந்திருந்தனர்.
இந்த முகாமில் சேலம் மாவட்ட மட்டுமல்லாமல் நாமக்கல் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 20,000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களுக்கு தகுந்த வேலையை தேடினர்.
மேலும் படிக்க | போதை பொருள் விற்பனையில் பாஜகவினர் - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த இளைஞர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
இந்த முகாமில் கலந்து கொண்ட பணி ஆணை பெற்றவர்களுக்கு பணி அணை வழங்கும் நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவிஸ் கணேசன் கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கணேசன், 'இன்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று உள்ளனர். காலை முதல் தற்போது வரை 1500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி அணை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் மேட்டூரில் இன்று இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட தங்கவேலுக்கு உரிய மரியாதை செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | உதயநிதிக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை! பின்வரிசையில் திமுக மூத்த அமைச்சர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR