குற்றத்திற்கு உடந்தையாக இருந்த போலீஸார் மீது அதிரடி நடவடிக்கை! 22 பேர் காத்திருப்போர் பட்டியலில்!

Police Action: போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்ட்டில் 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் மீது நடவடிக்கை 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2023, 02:28 PM IST
  • குற்றத்துக்கு துணை போன போலீசார்
  • நடவடிக்கை எடுத்த சென்னை போலீஸ் கமிஷனர்
  • காத்திருப்பு பட்டியலில் போலீஸ் அதிகாரிகள்
குற்றத்திற்கு உடந்தையாக இருந்த போலீஸார் மீது அதிரடி நடவடிக்கை! 22 பேர் காத்திருப்போர் பட்டியலில்! title=

சென்னை: போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததான குற்றச்சாட்டில் 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல் ஆணையரின் செயலுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இவர்கள் அனைவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களை தடுப்பதும் குற்ற செயல்களில் நிகழாமல் பார்த்துக் கொள்வதும் போலீசாருக்கு சவாலான விஷயமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒவ்வொரு காவலர்களும் போதைப் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் ஒரே காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நபர்களும் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் சென்னை வடக்கு காவல்துறையின் கூடுதல் ஆணையர் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்கு அடுத்தகட்டமாக, தற்போது ஆறு உதவி ஆய்வாளர்கள் இரண்டு தலைமை காவலர்கள் 14 காவலர்கள் மீது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார்.

போதை பொருள் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக இருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிரடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மேலும் தொடர்ந்து குற்ற செயல்களிலும் ஈடுபட ஆரம்பித்துள்ள நபர்கள் உடன் தொடர்பில் உள்ள வியாசர்பாடி, எம் கே பி நகர் கொடுங்கையூர் புளியந்தோப்பு திருவெற்றியூர் ஆர் கே நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் 800-க்கும் மேற்பட்ட காவலர்களையும் மாற்றம் செய்து கூடுதல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

மேலும் படிக்க | ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவிக்கு பாலியல் சீண்டல்!

இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டு காலமாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதால் பல்வேறு குற்றவாளிகளுடன் தொடர்பிருப்பதாக கண்டறியப்பட்டு அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

பழைய வழக்குகளில் பல வழக்குகள் குற்றப்பத்திரிகை பதிவு செய்யாமல் உள்ளதும் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு ஒருவரை ஒருமுறை நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பணிவுடன் வழக்க முடிந்து விட்டது என்று எண்ணாமல், அனைத்து வழக்குகளையும் பின் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூடுதல் ஆணையர் தெரிவித்திருக்கிறார்

சிறு சிறு வழக்குகளில் அடிக்கடி சிக்குபவர்கள் கூட ஒவ்வொரு வழக்கிற்கும் நீதிமன்றத்திற்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அவர்கள் குற்ற செயல் ஈடுபடுவதை பெருமளவு குறைக்க முடியும் என உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி நிலையில் பழைய வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தற்போது குற்றம் பின்னணியில் இருக்கும் நபர்களை கண்டறிந்து குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் காவலர்கள் ஈடுபட வேண்டும் எனவும் கூடுதல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒரே காவல் நிலையத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 800 காவலர்களும் பணியிட மாற்றம் செய்தும் தொடர்பில் உள்ள நபர்களை காத்திருப்போர் பட்டியலிலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க | பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல்.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News