பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வெளியில் நின்றவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது
இன்று மாலைக்குள் உடனடியாக சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டதால் பெங்களூரு கோர்ட்டில் சசிகலா இன்று சரணடைய உள்ளார். சாலை வழியாக சசிகலா மற்றும் அவரது அண்ணி இளவரசி இருவரும் ஒரே காரில் பெங்களூர் சிறை சாலை சென்றடைந்தார். நீதிபதி அஸ்வத் நாராயண் கோர்ட்டுக்கு வந்து ஆவணங்களை பார்வையிட்டு வருகிறார். சில நிமிடங்களில் சிறையில் சசிகலா அடைக்கப்படுவார். சசிகலா கணவர் நடராஜன் மாலை 5 மணியளவில் பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு வந்தார். அவருடன் நான்கு ஆதரவாளர்களும் வந்திருந்தனர்.
தற்போது சசிகலா ஆதரவாளர்கள் கார்கள் மீது தாக்குதல் நடத்தியதால், பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வெளியில் நின்றவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது
சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, சுப்ரீம் கோர்ட் நேற்று உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மூவரும் உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.