தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு நேர்முகத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: PMK

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 28, 2021, 11:31 AM IST
  • தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு.
  • அனைத்து நிலை அரசு பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் கோரிக்கை
தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு நேர்முகத் தேர்வுகளை  ரத்து செய்ய வேண்டும்: PMK title=

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு  நடத்தப்படும் நேர்முகத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆந்திராவில் அரசு பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கவும்  குரூப் -1 பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளுக்கும் நடத்தப்பட்டு வந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க சிறப்பான முடிவாகும் என தனது ட்விட்டர் (Twitter) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் அனைத்து நிலை அரசு பணிகளுக்கும்  நேர்காணலை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் கோரிக்கை வைத்துள்ளார். 

ALSO READ | PMK: 2021 - 2022ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது

எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும்; அதன் மூலம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். இதன் மூலம் முறைகேடுகளும் தடுக்கப்படும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்

Also Read | ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ₹3 கோடி பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News