மத்திய அமைச்சராகும் கனவு தகர்ந்த கூட்டணி கட்சியினர்! PBK ஜெகன் மூர்த்தி பேட்டி!

PBK Jagan Murthy: இந்திய கூட்டணியினர் வெற்றி கனவில் இருந்தார்கள், கூட்டணி கட்சியில் இருந்தவர்கள் முக்கிய இலாகா அமைச்சராக ஆகி விடுவோம் என்ற கனவு தகந்து போனது என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 8, 2024, 07:46 PM IST
  • தேர்தல் முடிவுகள் என்ன சொல்கிறது?
  • PBK தலைவர் ஜகன் மூர்த்தி பேட்டி!
  • அமைச்சர் கனவு தகர்ந்து போன கூட்டணி கட்சிக்காரர்கள்
மத்திய அமைச்சராகும் கனவு தகர்ந்த கூட்டணி கட்சியினர்! PBK ஜெகன் மூர்த்தி பேட்டி! title=

சென்னை கிழ‌க்கு கட‌ற்கரை காலை காணத்தூரில் கட்சி நிர்வாகியின் படத்திறப்பு நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,புரட்சி பாரதம் கட்சியின் மாநிலத் தலைவருமான ஜெகன் மூர்த்தி கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புரட்சி பாரதம் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகன் மூர்த்தி அவர்கள் நாளை பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடி மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் எதிர் வரிசையில் இருக்கின்றவர்கள் 40 தொகுதிகளில் கைப்பற்றி இருக்கிறார்கள் இந்தியா கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதுடன், எதிர்பார்த்த அளவுக்கு வாக்கு சதவீதமும் இல்லை. அதிலும் காங்கிரசின் தலைமையில் இருக்கின்ற இந்திய கூட்டணி காங்கிரசும் பெரும்பான்மை அடையவில்லை எனவும் அப்படியே வெற்றி பெற்றிருந்தாலும் இது பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது என தெரிவித்தார். 

இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில் ஆட்சியில் நாம் தான் அமர்வோம் என்றும் யாருக்கு என்னென்ன இலக்கா என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கனவு கண்டு இருந்தவர்களின் கனவு தகர்ந்திருக்கிறது என்று தெரிவித்தார்.

அந்த கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாம் நாம் எப்படியாவது இந்தத் துறையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கனவில் மிதந்து கொண்டு இருந்தார்கள் ஆனால் அந்த கனவுகள் எல்லாம் தகர்ந்திருக்கிறது

மீண்டும் பாஜகவின் கூட்டணி வென்று ஆட்சி அமைக்க இருக்கின்ற இந்த சூழலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தயாராக இல்லை எனவும், தேசிய அளவில் பட்டியலின மக்களுக்கு கிடைக்க இருக்கின்ற அத்தனை சலுகைகளையும் நிறுத்துகின்ற ஒரு சூழல் யார் ஆட்சிக்கு வந்தாலும் இது தொடர்ந்து வருவதாகவும் புதிதாக ஆட்சி பொறுப்பை ஏற்கின்ற பாஜக அரசுக்கும் பட்டியலின மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | திமுக கூட்டணியால் பலன் ஒன்றுமில்லை என தமிழிசை சவுந்திர ராஜன் விமர்சனம்

மக்கள் எல்லா மாநிலங்களிலும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் சாதி வெறி அடிமைத்தனங்கள் தீண்டாமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது தமிழகத்தில் திராவிடம் மண் என்று சொன்னாலும் தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு அக்கரமங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கிறோம் என்று கேட்டுக் கொண்டார்.

எந்த அரசு வந்தாலும் எங்களுடைய நிலைமைகள் தற்போது வரை இப்படித்தான் இருக்கிறது என்று வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன், கடந்த ஆட்சியில் இருந்தது போல் இல்லாமல் பாஜக அரசு இந்த மக்களுக்கு கண்டிப்பாக சரியான முறையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்த காலத்தில் புதுச்சேரி உட்பட 40 இடங்களிலும் வென்றார்கள், ஒருமுறை சட்டமன்றத் தேர்தலிலும் ஒரு தொகுதியை தவிர்த்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் என்று புரட்சி பாரதம் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது மக்கள் கையில் இருக்கிறது வெற்றி தோல்வி சகஜமாக தான் இருக்கிறது யார் நல்லது செய்கிறார்கள் என்று பார்த்து மக்கள் ஆட்சியில் அமர வைக்கிறார்கள் என்று கூறிய புரட்சி பாரதம் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகன் மூர்த்தி, தமிழக பாஜக தலைவர் ஆக யார் வரப் போகிறார்கள் என்பது தெரிந்த பின்னர் அவருடைய செயல்பாடுகள் பற்றி நாம் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

விருதுநகரில் மறு வாக்குப்பதிவு நடைபெற எந்த ஒரு பிரச்சனையும் நடைபெறவில்லை என்றும் எந்த புகரும் தேர்தல் ஆணையத்திற்கு வரவில்லை என்றும், தேர்தல் ஆணையம் எந்த ஒரு முடிவும் நீதிமன்றத்தின் எடுக்க முடியாது எனவும் நீதிமன்றம் மூலமே அனுமதி பெற்று மறுவாக்கு பதிவு நடத்தலாம் என்று தெரிவித்தார்

யார் பதவியேற்றாலும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் யார் பிரதமராக வந்தாலும் எங்களுடைய மக்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று புரட்சி பாரதம் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகன் மூர்த்தி கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க | வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்: எடப்பாடி பழனிச்சாமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News