ஈ.சி.ஆரில் நடந்த மதுவிருந்து... ஆட்டம் பாட்டம் ; போலீஸ் வந்ததும் அப்படியே ஓட்டம்..!

சென்னை ஈசிஆரில் உள்ள ரெசார்ட்டில் உரிய அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட மது விருந்து கொண்டாட்டம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 20, 2022, 02:28 PM IST

    ஈ.சி.ஆரில் நடந்த மதுவிருந்து...

    நடு இரவில் போட்ட குத்தாட்டம்...

    அனுமதியின்றி நடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு...

ஈ.சி.ஆரில் நடந்த மதுவிருந்து... ஆட்டம் பாட்டம் ; போலீஸ் வந்ததும் அப்படியே ஓட்டம்..!  title=

சென்னை இசிஆர் சாலையில் செயல்பட்டுவருகிறது பிரபல தனியார் விடுதி. வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹாசன் மெளலானாவுக்கு சொந்தமான இந்த விடுதியில் நேற்று இரவு நடந்த சம்பவம் ஒன்று பேசுப்பொருளாக மாறியுள்ளது. உரிய அனுமதியின்றி இசை நிகழ்ச்சியோடு சேர்த்து மது விருந்து நடந்ததாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  

ECR

மேலும் படிக்க | பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த மருத்துவர் சுப்பையா கைது!

ரகசிய தகவலை அடுத்து ரவி அவர்களின் உத்தரவின் பேரில் தனியார் விடுதிக்கு சென்ற மது விலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவு குறித்து இன்னும் போலீசார் தரப்பில் வெளியிடப்படவில்லை. தனியார் விடுதியில் நடைபெற்ற மது விருந்தில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  ஆடல் பாடல் நிகழ்ச்சி ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இந்த மது விருந்தில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நடனம் ஆடியதாக தகவல் வெளிவந்துள்ளது. தொடர்ந்து மது விருந்தில் கலந்து கொண்ட 500 க்கும் மேற்பட்டோரின் பெயர் மற்றும் முகவரிகளை போலீசார் சேகரித்து வருகின்றனர். 

Biker

மேலும் படிக்க | 5 வயது சிறுவன், 75 வயது மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு - கஞ்சா போதை ஆசாமியின் வெறிச்செயல்!

மது விருந்தில் கொக்கைன்,கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும்,வெளிநாட்டு மதுபானங்கள்,வெளிநாட்டு சிகரெட்டுகள் உள்ளிட்டவைகள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அனுமதி பெறாமல் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியென அதில் கலந்துகொண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் போனதாக கூறப்படுகிறது.

police case

ஆனால் விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் ரவி அவர்கள் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News