தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ₹.10 லட்சம் நிதி..

விஷவாயு தாக்கி தூத்துக்குடி அருகே உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்  நிதியுதவியை அறிவித்த முதல்வர் பழனிசாமி..!

Last Updated : Jul 3, 2020, 02:12 PM IST
தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா  ₹.10 லட்சம்  நிதி..  title=

விஷவாயு தாக்கி தூத்துக்குடி அருகே உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்  நிதியுதவியை அறிவித்த முதல்வர் பழனிசாமி..!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், செக்காரக்குடியில் இறந்த பாண்டி, இசக்கிராஜ், தினேஷ், பாலகிருஷ்ணன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்... "தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், செக்காரக்குடி கிராமத்தில், தனியார் ஒருவருடைய வீட்டில் 2.7.2020 அன்று கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்க முயன்ற போது,  திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரைச் சேர்ந்த பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ஆகிய நான்கு நபர்கள் விஷ வாயு தாக்கி  உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

READ | தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு

இச்சம்பவத்தில் உயிரிழந்த பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் தினேஷ் ஆகிய நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க தூத்துக்குடி மாவட்ட  நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Trending News