பழனி: பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம்தேதி நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. இதில் சேதமடைந்த கோபுரங்கள், கோபுரத்தில் உள்ள பதுமைகள், சுவர் ஓவியங்கள் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடந்துவருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் பழனி மலைக்கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி மலைக்கோவில் மூலவரான நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்துவது மற்றும் கருவறை சீரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதி அரசர் குங்கிலியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட்டது.
பழனி மலைக் கோவில் ஆய்வு
இந்தக் குழுவினர் கருவறை மற்றும் மூலவர் செய்தை ஆய்வு செய்து குழுவின் வழிகாட்டுதல் படி பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு பழனி மலை கோவில் கருவறை மற்றும் நவபாஷாண சிலையை சிலை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஓய்வு பெற்ற நீதி அரசர் பொங்கிலியப்பன் தலைமையில் பேரூர் மற்றும் சிறவை ஆதீனங்கள், ஸ்தபதிகள், சித்தமருத்துவர்கள், அர்ச்சகர்கள், இணை ஆணையர் நடராஜன் உடனிருந்தனர். நள்ளிரவு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு நடத்தப்பட்டு தொடர்ந்து அதிகாலை வரை இணை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
மேலும் படிக்க | Corona Alert: ஜப்பானைத் தொடர்ந்து கோவிட் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் வட கொரியா
நவபாஷாணச் சிலை
பழனி முருகன் சிலை, நவபாஷாணச் சிலை என்பது தெரியும். எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு கொடிய நோய்க்காக சுமார் 2800 வருடத்திற்கு முன்னால், போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை.
நவம் என்றால் 9, பாஷாணம் என்றால் நஞ்சு. நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை கலந்து செய்யும் விஷயம். சித்தர்கள் முறைப்படி ஒன்பது விஷங்களை சேர்த்துக் கட்டுவது ’நவபாஷாணம்’ என்று சொல்லப்படுகிறது.
முறைப்படி அணுக்களை பிரித்து, மீண்டும் சேர்ப்பதற்கு சித்தரியல் முறையில், ’நவபாஷாணம் கட்டுதல்’ என்றுப் பெயர். இந்த நவபாஷணத்தில், சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் என ஒன்பது வகையான விஷங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நவ பாஷாணங்களில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளதாக கூறப்படுகிறது. நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில், பழனி முருகன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மேலும் படிக்க | பேரிடர் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது ஜோஷிமடம்! மக்களை வெளியேற்றும் அரசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ