சென்னை தொழிலதிபர் வீட்டில் 60 தொன்மையான சிலைகள் பறிமுதல்!

சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டிலிருந்து 4 ஐம்பொன் உள்பட 60 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

Last Updated : Sep 27, 2018, 12:57 PM IST
சென்னை தொழிலதிபர் வீட்டில் 60 தொன்மையான சிலைகள் பறிமுதல்! title=

சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டிலிருந்து 4 ஐம்பொன் உள்பட 60 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் 4 ஐம்பொன் சிலைகள், 20 நந்தி சிலைகள் அடங்கும்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இருந்து சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொன்மையான கோவில்களின் தூண்கள் மற்றும் கற்சிலைகளும் இந்த சோதனையின் போது இவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக IG பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்!

முன்னதாக சிலை கடத்தல் வழக்கில் தீனதயாளன் என்பவரை காலவ்துறையினர் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலில் அடிப்படையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரது வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் 100 ஆண்டுகள் பழமையானது. மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு 100 கோடி வரை இருக்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளது. 

 

Trending News