மக்களை செழுமை கோட்டிற்கு மேல் வைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்..!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ‘சீரமைப்போம் தமிழகத்தை‘ என்ற தலைப்பில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் தொடங்கினார். இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய கமல்ஹாசன் (Kamal Haasan), நமது நாட்டில் மட்டுமே பெண்களை பல வழியில் போற்றுகிறோம். அவர்களுக்கு என தனித்திறமை உள்ளதை அனைவருமே உணர்ந்துள்ளோம். ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சாதனையாளர்கள் உள்ளனர். அதை யாரும் மறுக்கமுடியாது.
அதுமட்டுமல்ல, வீட்டில் பல வேலைகளை முன்னின்று செய்பவர்களும் தாய்மார்கள்தான். எனவே, மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படும். இது வெறும் தேர்தல் வாக்குறுதி மட்டுமல்ல, உலகம் எங்கும் உள்ள நேர்மையான ஆண்கள், தாயை வழிபடுவர்கள் இதைப்பற்றி யோசித்து வருகின்றனர். அதை நாங்கள் செயல்படுத்த உள்ளோம் என்றார். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் இந்த அதிரடி அறிவிப்பால், மற்ற கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
ALSO READ | ஈகோவை விட மக்கள் நலன் தான் முக்கியம்.. ரஜினி பக்கம் சாயும் கமல்!
இந்த நிலையில் நேற்று முதல் அவர் சென்னை காஞ்சிபுரம் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சென்னையில் உள்ள பல இடங்களில் அவர் பிரச்சாரம் செய்தபோது அவருக்கு பெரும்பாலான ஆதரவு இருந்தது என்பதும் அவரது பேச்சை கேட்க இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் அவருக்கு பெரும் வரவேற்பு அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR