தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் உருவச்சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,"சாதாரண கிராம புறங்களில் பிறந்தவர் கூட உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என போராடி அதில் வெற்றி கண்டவர் பெரியார். அவரது கொள்கைகள் தமிழ்நாட்டில் ஆழமாக விதைக்கப்பட்டு, ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது. அவருக்கு
அதிமுக சார்பாக இதயபூர்வமான புகழஞ்சலி செலுத்தினேன்" என தெரிவித்தார்.
மேலும் படிக்க | சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று பாராட்டும் அதிமுகவின் ஜெயக்குமார்
பண்ருட்டி ராமச்சந்திரன் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்து பேசிய அவர், 'பண்ருட்டி ராமச்சந்திரன் பெரியார் , அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோருடன் உடனிருந்து பயணித்தவர். ஐநா சபையில் உரையாற்றிய பெருமையை அதிமுகவுக்கு பெற்று தந்தவர். அரசியல் காரணங்களுக்காக பல பேர் கருத்துகளை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். அதை புறந்தள்ளி, அவரது தொண்டையும் தியாகத்தை மட்டுமே எண்ணி செயல்பட வேண்டும்.
தான் ஜெயலலிதாவோடு 21 வருடம் பணியாற்றிவன், பல முறை என்னை குறித்து அவர் மனதில் உள்ளதை சொல்லி இருக்கிறார். என்னை பொறுத்தவரை ஜெயலலிதாவின் வாக்குதான் வேதவாக்கு. மற்றவர்களின் வாக்கு, என்ன வாக்கு என்பதை நான் சொல்லவில்லை. அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், 'அரசு அவர்களது கடமையை செய்கிறது. நிரூபிக்க வேண்டிய கடமை குற்றம்சாட்டப்பட்டவர்களின் பொறுப்பு' என கூறினார். திமுக அரசு உங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது குறித்த கேள்விக்கு,'எனக்கு ஜெயலலிதா இரண்டு முறை அமைச்சர் பதவி கொடுத்தார்.
13 ஆண்டுகளுக்கு பின்னர் முதலமைச்சராக பதவியை தந்தார். ஜெயலலிதாவுக்கு விசுவாசமிக்க தொண்டனாக தான் பணியாற்றினேன். தலைவர் என்ற நிலைக்கு என்றுமே சென்றதில்லை. எம்ஜிஆர் எந்த நோக்கத்துக்காக அதிமுகவை தொடங்கினாரோ, ஜெயலலிதா வளர்த்தாரோ, அதனுடைய அடிப்படை எந்த நேரத்திலும் சிதைந்துவிடாமல் காப்பாற்றுவது எங்களைப் போன்ற அதிமுக தொண்டர்களின் கடமை" என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ