OPSvsEPS : அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் படம் அகற்றம்

OPSvsEPS : அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் படத்தை கிழித்தனர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jun 27, 2022, 11:45 AM IST
  • அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் நீக்கம்
  • வலுக்கிறது எடப்பாடி பழனிசாமி முகாம்
  • அதிமுகவின் அடுத்த முடிவு என்ன?
OPSvsEPS : அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓபிஎஸ் படம் அகற்றம் title=

அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து உச்சம் பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வரும் பனிப்போரில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 75 தலைமைக் கழக நிர்வாகிகள் அடங்கிய கட்சியில் 71 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதாவது கட்சியில் ஏகோபித்த ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதை இது காட்டுகிறது.

மேலும் படிக்க | சுற்றுப் பயணத்தில் கைகோர்க்கும் ஓபிஎஸ் - சசிகலா? தேனியில் முக்கிய முடிவு

ஓ.பன்னீர்செல்வம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் படத்தினை தொண்டர்கள் கிழித்து எறிந்தனர். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். 

 

 

இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள தலைமைக் கழகம், ஓ.பி.எஸ்-இன் புகைப்படத்தை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மீண்டும் புதிதாக வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. படம் கிழிக்கப்பட்டதற்காக கண்டனங்களையும் தெரிவித்துள்ளது தலைமைக் கழகம்.

 

 

மேலும் படிக்க | அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு - கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் போஸ்டர்... தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News