தமிழ்நாட்டில் நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஒமிக்ரான் தொற்று உறுதியான இந்த 33 பேரில், 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கடந்த மாதம் 24ம் தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன.
ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில் கால்பதித்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு உறுதி செய்திருக்கிறது. இந்தியாவிலும் கடந்த 2ம் தேதி நுழைந்த இந்த வைரஸ் 21 நாளில் 236 பேருக்கு பாதித்துள்ளது. டெல்டா வைரசை விட குறைந்தது 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 104 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார்.
ALSO READ |Omicron: தில்லியில் கிரிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுபாடுகள்..!!
இந்தநிலையில், 41 பேரின் மரபணு பகுப்பாய்வு முடிவுகள் வெளியானதில் 33 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் உறுதியான 33 பேரில் 30 பேர் நீங்கலாக எஞ்சிய 3 பேரில், 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், ஒருவர் கேரளாவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் கண்டறியப்பட்ட நிலையில் முடிவுகளுக்காக காத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் தொற்று 85 -க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ALSO READ | இந்தியாவில் 200ஐ தாண்டிய Omicron பாதிப்பு; அமலாகப்போகிறது Night Curfew
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR