ஐசியூ பிரிவில் நடிகர் ரஜினிகாந்த்! மருத்துவமனை அறிக்கை வருவதில் தாமதம்!

Actor Rajinikanth in ICU: நடிகை ரஜினிகாந்த்துக்கு ஆன்ஜியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரைத் தொடர்ந்து மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வருவதாகவும் தகவல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 1, 2024, 11:18 AM IST
ஐசியூ பிரிவில் நடிகர் ரஜினிகாந்த்! மருத்துவமனை அறிக்கை வருவதில் தாமதம்! title=

Rajinikanth Health Updates: உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஆன்ஜியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அவர் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் எனத் தகவல்.

நேற்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டாதால், சென்னை ஆயிரம் விளக்கில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனை அப்போலோவில் யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

வழக்கமான சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்,. முழுமையான பரிசோதனை முடிந்த பிறகு அவர் வீடு திரும்புவார் எனத் தகவல்கள் வெளியாகின. 

இந்தநிலையில், இன்று காலை வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா எனக் கண்டறிய இருதயவியல் துறையைச் சார்ந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். ரத்த நாளத்தில் லேசாக அடைப்பு இருந்ததை தொடர்ந்து, அவருக்கு ஆன்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. 

ஆன்ஜியோ சிகிச்சையின் தொடர்ச்சியாக தற்போது அவர் அருகில் இருக்கக்கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தற்போது ஐசியு பிரிவு சிகிச்சையில் இருக்கிறார் எனத் தகவல். 

அடுத்த 24 மணி ஐசியு பிரிவில் ரஜினிகாந்த் இருப்பார் எனவும், அதன் பிறகு சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இருதய மருத்துவர் சாய் சதீஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் உடல்நலத்தை கண்காணித்து வருவதாக தகவல்.

நடிகர் ரஜினிகாந்த் தொடர்பான மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், நடிகை ரஜினிகாந்த்துக்கு ஆன்ஜியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரைத் தொடர்ந்து மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வருவதாகவும் தகவல்.

மேலும் படிக்க - Rajinikanth Health | அப்பல்லோவில் ரஜினிகாந்த்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்ட ட்வீட்..

மேலும் படிக்க - நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் முடியாமல் மருத்துவமனையில் அனுமதி!

மேலும் படிக்க - வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் 52 நிமிடம் பேசிய ரஜினி!! அப்படி என்ன சொன்னார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News