பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கு ஓ.பன்னீர்செல்வம் அணி ஆதரவு

Last Updated : Jun 22, 2017, 02:31 PM IST
பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளருக்கு ஓ.பன்னீர்செல்வம் அணி ஆதரவு title=

பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு தரக் கோரி, பா.ஜ.க அனைத்து மாநிலக் கட்சிகளிடம் கேட்டு வருகிறது. 

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு எங்கள் அணி ஆதரவு அளிக்கும் என்றும், தலித் ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம் என்றும் கூறினார்.

 

 

 

Trending News