சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்போதும் பாதுகாப்பு மிகுந்த பகுதியாக இருக்கும். இந்த நிலையில் நேற்று இரவு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வட இந்திய வாலிபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது காவல்துறையின் பிடியில் இருந்து தப்பித்த இளைஞர் அங்குமிங்கும் ஓடுவதாக இருந்ததால் அவரை காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். ஆனால் காவல்துறையினருக்கு பிடிகொடுக்காமல் அவர்களுக்கு தண்ணி காட்டுவது போல அங்குமிங்கும் அலைந்து காவல்துறையினரை கடுப்பேற்றினார்.
மேலும் படிக்க | அடக்கடவுளே..! ஒரு எலுமிச்சம் பழம் 33 ஆயிரமா?
ஒரு கட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள நினைவுத்தூண் முன்பு அமர்ந்து வாலிபர் திடீரென தியானத்தில் ஈடுபட்டார், பின்பு அலுவலகம் முன்பு வந்த நகர பேருந்து மீது ஏறி எந்தவித பதற்றமும் இல்லாமல் வாக்கிங் செல்ல முயன்றார். தொடர்ந்து பேருந்து மீது இருந்த டயரை எடுத்து உருட்டி கீழே தள்ள முயற்சி செய்தார். அப்போது கீழே இருப்பவர்கள் அனைவரும் கூச்சலிட்டதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து டயரை அங்கேயே போட்டுவிட்டு அதன் மீது ஏரி மீண்டும் தியானத்தில் ஈடுபட்டார். என்ன செய்வதறியாது திகைத்த காவல்துறையினர் அவரை பிடிக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
ஒருகட்டத்தில் காவல்துறையினர் ஒன்றிணைந்து அவரை பிடிக்க முயன்றபோது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து வேகமாக ஓடி திடீரென தடுமாறி கீழே விழுந்தார். அப்போது கையும் களவுமாக மாட்டிய இளைஞரை காவல்துறையினர், இழுத்து வந்து அலுவலத்திற்கு வெளியே அமர வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மீண்டும் அவருடைய சேட்டைகளை ஆரம்பித்தார், ஒருகட்டத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அவர்களின் பிடியில் இருந்து மீண்டும் தப்பி ஓடினார். இதனையடுத்து வாலிபர் விட்டுச்சென்ற உடமைகளை சோதனையிட்டபோது அவர் ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த தனுஷ் நாயர் என்பதும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
குடிபோதையில் இருந்த வாலிபர் எதற்காக இப்படி செய்தார் அல்லது மனநோயாளியா என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் காவல் துறைக்கு சுமார் ஒரு மணிநேரம் சவால் விடுக்கும் வகையில் அங்குமிங்கும் ஓடி தண்ணி காட்டிய வாலிபரின் செயல் காவலரை மட்டுமல்ல பார்வையாளர்களையும் கடுப்பேத்த வைத்தது.
மேலும் படிக்க | மீண்டும் குதிரைப் பந்தயம் : பரிசு எத்தனை லட்சம் தெரியுமா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR