Nirmala Sitharaman: அரசு வெள்ள நிவாரணம் வழங்குவது பிச்சையா? நிர்மலா சீதாராமன் சர்ச்சை பேச்சு

Nirmala Sitharaman: சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னொருத்தர் போடக்கூடிய பிச்சையில் வாழவேண்டிய தேவையில்லை என பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 17, 2024, 11:25 AM IST
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்ச்சை பேச்சு
  • மழையால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் எதிர்பார்க்கக்கூடாது
  • இன்னொருத்தர் போடும் பிச்சையில் வாழவேண்டிய அவசியமில்லை
Nirmala Sitharaman: அரசு வெள்ள நிவாரணம் வழங்குவது பிச்சையா? நிர்மலா சீதாராமன் சர்ச்சை பேச்சு title=

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசும்போது, அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பது பிச்சை, அந்த பிச்சையை மக்கள் வாங்கி பிழைக்க கூடாது என்கிற தொனியில் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையாகியுள்ளது. அண்மையில் பாஜகவில் இருக்கும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, தமிழ்நாடு அரசு பெண்களுக்கு கொடுக்கும் உரிமைத் தொகையை பிச்சை என விமர்சித்தார். இதற்கு பெண்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்த நிலையில், இப்போது தமிழ்நாடு அரசு கொடுத்த வெள்ள நிவாரண நிதி பிச்சை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது பாதிக்கப்பட்ட மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்: 21 தமிழக மீனவர்கள் கைது

நிர்மலா சீதாராமன் பேசும்போது, " எப்ப பாரு இன்னொருதரு போடுற பிச்சையில நாம வாழ தேவையில்லை. சில கட்சிகள் நம்மை எப்படி ட்ரீட் பண்றாங்கனா, வெள்ளமா இந்தா ஆயிரம் ரூபாய் எடுத்துக்கோ, ஊ வீடு இடிஞ்சு விழுந்திருச்சா இந்தா 500 ரூபாய் எடுத்துக்கோ, அந்த மாதிரி கட்சிகளோட அரசியலால நாடு முன்னேறாது. தூர நோக்கு இருக்கணும். நல்ல விதமான நியாயமான அரசியல் பண்ணறதுக்கான வில்லிங்னஸ் இருக்கணும், கமிட்மென்ட் இருக்கணும்." என பேசினார். அவரின் இந்த பேச்சு அரசியல் தளத்திலும், மக்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அண்மையில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை கொடுத்தது. விவசாயிகள், வீடுகளை இழந்தவர்களுக்கும் அரசு சார்பில் முன்னுரிமை அடிப்படையில் உதவிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது திடீரென அங்கிருந்த பெருமாள் கோவிலுக்குள் சென்ற அவர், அர்ச்சகர்களின் கோரிக்கைகளை கேட்டார்.

அத்துடன் உடனே அரசு அதிகாரிகளை அழைத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அர்ச்சகர்கள் கேட்கும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி கொடுக்குமாறு அறிவுறுத்தினார். அப்போது, பக்தர் ஒருவர் 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியபோது, உடனே அந்தப் பணத்தை உண்டியலில் போடாதப்பா, எங்க கொடுக்கணுமோ அங்க கொடுங்க என்றும் கூறினார். இதனையடுத்து டெல்லி சென்றார்.

அதன்பிறகு தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு சார்பில் நிவராண நிதி வழங்கப்படும்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடமும் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவே இல்லை. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே குற்றச்சாட்டாக முன்வைத்தார். இந்த சூழலில் தான், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் யாரிடமும் எந்த உதவியும் எதிர்பார்க்கக்கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். அவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருதும் கண்டனம் எழுந்துள்ளது.

மேலும் படிக்க | அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்! இந்த விஷயங்களில் கவனம் தேவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News