மதுரை ஆதீனம்: 10 நாட்கள் குரு பூஜைக்கு பிறகு, புதிய ஆதீனத்தின் பீடோகரனம் நிகழ்ச்சி..!!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்களால் முடிசூட்டப்பட்ட, ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிய ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக  இருப்பார் என மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 19, 2021, 09:10 AM IST
மதுரை ஆதீனம்: 10 நாட்கள் குரு பூஜைக்கு பிறகு, புதிய ஆதீனத்தின் பீடோகரனம் நிகழ்ச்சி..!! title=

மதுரை: புகழ்பெற்ற மதுரை ஆதீனத்தின் 292வது மடாதிபதி அருணகிரிநாத சுவாமிகள் சிவலோக பிராப்த்தி அடைந்ததை அடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு இளைய மடாதிபதியாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்களால் முடிசூட்டப்பட்ட, ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிய ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக  இருப்பார் என மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அதை அடுத்து அவருக்கும் தீக்‌ஷை வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டு, அவர் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில்  10 நாட்கள் குரு பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

293-வது ஆதீனமாக ஹரிஹர தேசிகர் பொறுப்பேற்ற நிலையில் 10 நாட்கள் தொடர்ந்து குருபூஜை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பீடத்தில் அமரும் நிகழ்வான பீடோகரனம் என்னும் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. 292வது பீடாதியான அருணகிரி நாதர் மறைந்ததை அடுத்து அவரது அறைக்கு சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக 293வது புதிய ஆதீனம் ஹரிஹர தேசிகர் முன்னிலையில் அந்த சீல் அகற்றப்பட்டு, அதில் உள்ள நகைகள் மற்றும் ஆவணங்கள் புதிய ஆதீனத்திடன் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதரால் அடுத்த வாரிசு என்று ஒரு காலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நித்தியானந்தா, தானே அடுத்த மடாதிபதி என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | மதுரை ஆதீன மடத்தின் பீடாதிபதியாக தன்னை அறிவித்துள்ள நித்யானந்தா..!! 

தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.  மதுரை நகரில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.

திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்திய மதுரை ஆதீனம் மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்ட திருமடம் ஆகும். இதுவரை மொத்தம் 292 பேர் மடாதிபதியாக இருந்துள்ளனர்.

திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்திய மதுரை ஆதீனம் மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்ட திருமடம் ஆகும். இறுவரை மொத்தம் 292 பேர் மடாதிபதியாக இருந்துள்ளனர்.

ALSO READ | மதுரை ஆதீனம் மறைவுக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News