மகாகவி பாரதியார் தனது இளமை பருவத்தில் நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியபடி நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் பள்ளியில் பயின்றார். அவரது நினைவை போற்றும் வகையில் பாரதியார் பயின்ற வகுப்பறையை நாற்றங்கால் என பெயரிட்டு பள்ளி நிர்வாகத்தினர் பராமரித்து வருகின்றனர்.
மேலும் பெண் விடுதலை குறித்தும் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பாரதியார் அதிக பாடல்கள் பாடியுள்ளதால் இன்று வரை அந்த வகுப்பறையில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் ஆசிரியர்கள் உள்பட யாரும் அந்த வகுப்பறைக்குள் செருப்பு அணிந்து செல்வதில்லை.
இதுபோன்று பாரதியாரின் நினைவுகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் இப்பள்ளியில் ஆண்டுதோறும் பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு தொடர் நிகழ்வுகளை முன்னெடுப்பார்கள். அந்த வகையில் இந்தாண்டு பாரதியாரின் நினைவு நினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், மதுரை திரவியம் தாயுமானவர் பள்ளியில் மாணவிகள் இன்று பாரதியார் பாடல்களை பாடி அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நாட்டின் ஒற்றுமை குறித்து மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
பின்னர் பள்ளி நுழைவு வாயிலில் உள்ள பாரதியார் சிலைக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பாரதியார் மீசை வரைதல் நிகழ்வு நடைபெற்றது. நெல்லை கோட்டாட்சியர் சந்திரசேகர் மற்றும் பள்ளியின் ஓவிய ஆசிரியர் சொக்கலிங்கம் ஆகியோர் இந்த ஓவிய போட்டியை தொடங்கி வைத்தனர்.
மேலும் படிக்க | இலவச காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்திடும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அதில், கோட்டாட்சியர் சந்திரசேகர் மாணவர்களோடு சேர்ந்து பாரதியாரின் மீசையை வரைந்தார். இறுதியாக சிறப்பாக மீசை வரைந்த மாணவர்களுக்கு பாரதியின் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இலக்கணக் கட்டுகளைத் தகர்த்தெறிந்து கவிதைகளைப் படைத்து, 38 வயதில் இம்மண்ணை விட்டு பிரிந்த பாரதி, இன்றும் இதுபோன்ற நினைவுகளால் உயிரோடுதான் நம்முடன் வாழ்ந்து வருகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ