நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்!

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது!!

Last Updated : Jan 27, 2020, 03:25 PM IST
நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்!  title=

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது!!

டெல்லி: நீட் தேர்வு என்பது ஏற்கனவே முடிவு செய்து விட்ட விஷயம்; அதை மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. நீட் கட்டாயம் என்ற சட்டத்திருத்தத்திற்கு எதிராக வேலூர் CMC கல்லூரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக வேலூர் மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவை தொடர்ந்த வழக்கு மீது உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை செய்தது. ஆண்டுதோறும் சட்டங்களை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. ஆகையால் நீட் நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க இயலாது என நீதிபதி அருண் மிஸ்ரா பெஞ்ச் ஏற்கனவே தெரிவித்தது. 

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கூறுகையில், "நீட் தேர்வு என்பது ஏற்கனவே முடிவு செய்து விட்ட விஷயம்; அதை மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

நடப்பாண்டில் 1.17 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு 1.40 லட்சம் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் தேசிய அளவில் இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கு கடந்த ஆண்டை விட 74,000 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு எழுதி 4,202 பேர் கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தனர். இவர்களில் 70% பேர் அதாவது 2,916 மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து ஓராண்டுக்குப் பின்னர் நீட் தேர்வு எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News