நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான கோகிலா. கணவரை இழந்த கோகிலாவுக்கு ஆர்த்தி என்ற மகளும், வசந்தகுமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3 வருடத்திற்கு முன், லாரி பாடிபில்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்த கார்த்தி என்பவர் ஆர்த்தியை காதலித்துள்ளார். அதன் பின்னர், கோகிலாவிடம் பெண் கேட்டு இருவீட்டார் சம்மதத்துடன் ஆர்த்தியை திருமணம் முடித்திருக்கிறார். காதல் மனைவியுடன் ஆசை ஆசையாய் வாழ்க்கையை தொடங்கியவருக்கு அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
திருமணம் ஆன ஒரு வாரத்தில் வலிப்பு ஏற்பட்டு கார்த்தியின் உடல்நிலை கடும் மோசமானது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆர்த்தி, கருவேப்பம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு திரும்பி சென்றிருக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை கார்த்தியை பிரிந்து ஆர்த்தி, தனியாகதான் வசித்து வருகிறார். இதனால் மனைவி இல்லாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கார்த்தி, வெளியே செல்வதை தவிர்த்து நான்கு சுவருக்குள் முடங்கி போனார்.
இதற்கிடையே, பல முறை வாழ வர சொல்லி கெஞ்சியும் ஆர்த்தி, கணவர் கார்த்தியை கண்டுகொள்ளாமல் போனதாக சொல்லப்படுக்கிறது. இருந்தும் எப்படியாவது மனைவி மனதுமாறி தன்னுடன் வந்துவிடுவார் என்று நம்பிக்கையோடு இருந்த கார்த்தி, மாமியாரின் வீட்டுக்கு அருகிலேயே வீடு பார்த்து சென்றிருக்கிறார்.
அப்போதுதான் பிரச்சினை பெரிதானது. ஆர்த்தியை தேடி செல்லும் போதெல்லாம், கார்த்திக்கும் மாமியார் கோகிலாவுக்கும் வாக்குவாதம் ஏற்படுவது வழக்கமாக மாறியது. சம்பவத்தன்றும் அதேதான், வழக்கம் போல மருமகனும் மாமியாரும் வாக்குவாதத்தில் ஈடுபட எல்லைமீறிப் போனது. வேலைக்கு சென்ற ஆர்த்தியை அழைத்துவர அவரின் தம்பி வசந்தகுமார் சென்றுவிட, தனியாக மோதிக்கொண்ட இருவரும் ஆக்ரோஷமானார்கள். ஒரு கட்டத்தில் கொலைவெறி தலைக்கேறிய கார்த்தி, வீட்டிலிருந்த குழவிக்கல்லை எடுத்து மாமியாரின் தலையில் போட்டிருக்கிறார். போட்ட வேகத்தில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்துவிழுந்த கோகிலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் படிக்க | பயங்கர சண்டை... தடுக்க போனது குற்றமா... அடித்து கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்!
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அரண்டு போய் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டு வாசலில் ரத்த கறையோடு அமர்ந்திருந்த கார்த்தியை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் வீட்டிற்குள் உருக்குலைந்து கிடந்த கோகிலாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், கார்த்திக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியுடன் வாழ விடவில்லை என தலையில் கல்லைப் போட்டு மாமியாரை மருமகனே கொலை செய்த சம்பவம் கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | மீனவ பெண் கொலை ; சம்பவ இடத்தில் கைதானவர்கள் காட்டிய தடையங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR