சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அப்பகுதியில் உள்ள 117 வீடுகளை அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூருக்கு நேற்று நேரில் சென்றார்.
அண்ணாமலை நகர் பகுதிக்கு சென்ற அவர் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது திடீரென சீமான் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சீமானை சுற்றியிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அவர் மயங்கியதை அடுத்து அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் படிக்க | சீமானின் அப்பா காலமானார், முதல்வர் ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி
இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சீமான் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து இயல்பு நிலைக்கு திரும்பிய அவர் நேற்று மாலையே வீடு திரும்பினார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் மயங்கி விழுந்து இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்!@CMOTamilnadu @mkstalin
— சீமான் (@SeemanOfficial) April 3, 2022
இந்நிலையில், சீமானை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீமான், “எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | இதுதான் திமுக அரசின் சமூக நீதியா?- சீமான் கண்டனம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR