தந்திரமாக நுழையும் இந்தி - ‘வெறியர்கள்’ என பகிரங்கமாக விமர்சித்த எம்.பி. சு.வெங்கடேசன்!

MP Su Venkatesan Condemns Hindu Imposition : இன்னும் எத்தனை வழிகளில்தான் இந்தி மொழியைத் திணித்தாலும், அதனைக் கண்டுபிடித்து பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்கிறது தமிழ்நாடு. இப்போது புதிய வழியில் வருகிறது. எம்.பி.வெங்கடேசன் அளித்த அனல் பறக்கும் கமெண்ட்!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Aug 2, 2022, 03:05 PM IST
  • தந்திரமாக தமிழ்நாட்டிற்குள் நுழையும் இந்தி மொழி
  • தோலுரித்துக் காட்டிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
  • ரயில்வே வாரியம் பிறப்பித்த அந்த உத்தரவு என்ன ?
தந்திரமாக நுழையும் இந்தி - ‘வெறியர்கள்’ என பகிரங்கமாக விமர்சித்த எம்.பி. சு.வெங்கடேசன்! title=

எந்த மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்க நினைத்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் தந்திரமாக நுழையும் உத்தியைக் கையாளக் காரணம், நீண்ட நெடிய போராட்டமும், அதன் தொடர்ச்சியான அரசியலும் தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதால்தான். ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வந்தாலும் தமிழ்நாடு மட்டும் ஜனநாயகத்தின் வழியில் அதனை தோலுரித்துக் காட்டிக்கொண்டே இருக்கிறது. 

மேலும் படிக்க | இளையராஜாவும் இந்தி எதிர்ப்பு போராட்டமும்..

இந்தியா பன்மைத்துவமான நாடு என்பதையும், அதில் எல்லா மொழியும் தேசிய மொழிகள்தான் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் மாநிலங்களில் தமிழ்நாடு எப்போதும் ஒருபடி மேலேதான். இன்னும்சொல்லப்போனால், இந்த அரசியலையும், மாநில உரிமைகளையும் ஏனைய மாநிலங்களைவிட முதன்மையாகவும், அதிகமாகவும் பதிவு செய்த குரல் தமிழ்நாட்டுடையது.

நீநீநீநீண்ட பாரம்பரியம் கொண்ட இந்தி மொழி எதிர்ப்பில் தமிழ்நாடு இப்போதுவரை ஒரே கொள்கையில்தான் பயணிக்கிறது. இருமொழிக் கொள்கையில் சற்றும் தளராத தமிழ்நாடு, மத்திய அரசிடமும் அதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைவரும் ஆங்கில மொழிக்குப் பதிலாக இந்தி மொழியைக் கற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கும் தமிழ்நாடு ஜனநாயகப்பூர்வமான விளக்கங்களோடு பதிலடிக் கொடுத்தது.

இதனால் தந்திரமான வழிகளில் எல்லாம் இந்தியை நுழைக்க முயற்சித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மாற்றுத்திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மைத்திற்கான தேர்வில் ஒரு இடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பில் ‘இந்தி புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு அறிவு’ இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை உடனடியாக தோலுரித்துக் காட்டிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், ‘இருப்பதே ஒரேயொரு காலியிடம். அதுவும் 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான பணி. இருந்தாலும் இந்தியைத் தகுதியாக்குகிறார்கள்’ என்று விமர்சித்திருந்தார். 

இப்படி மத்திய அரசின் ஒவ்வொரு முயற்சியையும் மதுரை எம்.பி வெங்கடேசன் தொடர்ந்து மக்களின் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போதும் தந்திரமான ஒரு முயற்சியை பொதுவெளி கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். 

இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்களில் விசாரணை மற்றும் உதவி மையம் என்ற ஒன்று இருக்குமல்லவா. தமிழ்நாட்டில் ‘விசாரணை’, ‘உதவி மையம்’ என்ற பெயரோடு செயல்பட்டு வருவதை, ‘சஹ்யோக்’ என்று மாற்றுமாறு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. சஹ்யோக் என்றால் இந்திமொழியில் உதவி என்று பொருள். ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | சொற்கள் இல்லாவிட்டால் என்ன அதான் பெயர் இருக்கிறதே - மத்திய அரசை விளாசும் எம்.பி.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தி வெறியர்கள் என்றே அழைத்து கடுமையாக விமர்சித்திருக்கிறார். மேலும், இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மற்றும் உதவி மையங்களின் பெயர்களை "சஹ்யோக்" என்று மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது என்றும், இந்தி வெறியர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக தலையிட்டு இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் எம்.பி.சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். 

மத்திய ரயில்வே அமைச்சகம் என்ன பதில் சொல்லப் போகிறது இதற்கு?!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News