கலைஞரின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது!

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6:10 மணிக்கு காலமானார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 9, 2018, 12:24 PM IST
கலைஞரின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது! title=

21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது கலைஞர் கருணாநிதியின் உடல்!


மெரினா வந்தடைந்தது திமுக தலைவர் கருணாநிதியின் புகழுடல்.. இன்னும் சற்று நேரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் : காமராஜர் சாலையில் அலைமோதும் மக்கள் கூட்டம்! சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியே செல்கிறது கருணாநிதி இறுதி பயணம்


ராஜாஜி அரங்கத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. இறுதி ஊர்வலம் முடிவடைந்த பிறகு திமுக தலைவர் கருணாநிதி உடல் அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


திமுக தலைவர் கருணாநிதி இறுதி ஊர்வலம் தொடங்கியது. தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி. சாலை முழுவதும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது இதனால் பாதுகாப்புக்காக சாலையில் இரு புறங்களிலும் காவல்துறையினர் குவிப்பு.


15:41 08-08-2018
லட்சக்கணக்கான தொண்டர்கள் படை சூழ மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின்  இறுதி ஊர்வலம் ஆரம்பமானது....

 

 


15:22 08-08-2018
கேரள முதல்வர் பினராய் விஜயன், கவர்னர் பி. சதாசிவம், காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் திமுக தலைவர் கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 


15:20 08-08-2018
சென்னை: ராஜாஜி அரங்கத்தில் வைக்கபட்டு உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை பார்வையிட்ட நீண்ட வரிசையில் காத்திருக்கும் தொண்டர்கள்.

 


15:10 08-08-2018
சென்னையில் மரினா கடற்கரையில் திமுக தலைவர் கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யும் ஏற்பாடு பணிகள் செயல்பட்டு வருகிறது.

 


15:01 08-08-2018
சென்னை: தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் திமுக தலைவர் கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞரின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். 

 


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞரின் உடலுக்கு உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அஞ்சலி செலுத்தினார். 

 

;

 


திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதியை நல்லடக்கம் செய்வதற்கான இடத்தை போராடி பெற்றோம். கலவரம் ஏற்பட இடம் தராமல், தொண்டர்கள் கலைந்து செல்ல வேண்டும். தயவுசெய்து அனைவரும் கலைந்து செல்வீர்களா??கலைந்து செல்வீர்களா?? கலைந்து சென்றால்தான் திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மெரினா தீர்ப்பு சாதகமாக வந்ததால் திட்டமிட்டு சில விஷயங்களை அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறார்கள் 

 

 


"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் சந்தன பேழை உடல் அடக்கம் செய்யும் இடத்தில் எழுத வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி விருப்பம் என தகவல்!


திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கும் என திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

 


தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன்: மோடி டிவீட் பதிவு!

 

 

 


திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு சோனியா காந்தி இரங்கல் கடிதம் வெளியிட்டுளார்!


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. 


திமுக தலைவர் கலைஞர் அடக்கம் செய்யப்படவுள்ள மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. மாதிரி வரைபடத்தை வழங்கிய திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. 


மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில், காரைக்காலில் புதிய மேற்கு புறவழிச் சாலைக்கு  கருணாநிதியின் பெயர் வைக்கப்படும் என்றும் புதுச்சேரியில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை வைக்கப்படும் எனவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.


மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் பள்ளம் தோண்டுவதற்காக 2 ஜேசிபி இயந்திரங்கள் வருகை தந்துள்ளது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உள்ளனர்.

 

 

 

 


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டார்.


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர்  கலைஞர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். மோடியுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

 

 

 

 

 

 


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு மதிமுக கட்சியின் தலைவர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார்.


திமுக தலைவர் கலைஞரின் உடலுக்கு மெரினாவில் இடம் ஒதுக்கி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்ததால் திமுகவினர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

 


திமுக தலைவர் மறைவின் காரணமாக லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வந்த சர்கார் படத்தின் படப்பிடிப்பு இன்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது! 


திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குமாறு ஐகோர்ட் உத்தரவு! கண்ணீர் விட்ட ஸ்டாலின்!

 

 


திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு ஐகோர்ட் உத்தரவு!


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

 

 


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மு.க. ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார். 

(M.G.R இருந்திருந்தால் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்திருப்பார் -கமல்!)

 

 


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞரின் உடலுக்கு  நடிகர் விஷால், நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் வடிவேலு அஞ்சலி செலுத்தினார்.


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் சங்கம் சார்பில் நாசர் உள்ளிட்டோர் செலுத்தினர்.


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தாஜ்மஹால் வயதான கட்டிடம் என்பதால் அது மண்ணில் புதைந்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ அப்படித்தான் கருணாநிதி வயதானவர் என்பதால் அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கருணாநிதி ஓர் எழுத்தாளராகவும், போராளியாகவும், கவிஞராகவும், அரசியல்வாதியாகவும் வாழ்ந்திருக்கிறார். தமிழகத்தின் புரட்சிகர தலைவர் மறைந்துவிட்டார்.

மின்சாரம் இல்லாத ஊரில் பிறந்தார். ஆனால், ஏழை விவசாயிகளுக்கு அவர்தான் இலவச மின்சாரம் வழங்கினார். அவர் முறையான கல்வி கற்கவில்லை. ஆனால், இலவச கல்வி வழங்கினார். பெரியார் ஆட்சிப் பொறுப்பை மறுத்திருந்தார். காலம் அண்ணாவுக்கு ஆயுளை மறுத்திருந்தது. ஆனால் இந்த இரண்டையும் ஒருங்கே பெற்று இத்தனை ஆண்டுகள் கலைஞர் இயங்கினார். தமிழ் மொழி வாழும்வரை கருணாநிதி வாழ்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தினார். 


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு டி.ராஜேந்தர் அஞ்சலி செலுத்தினார். 


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விவேக் அஞ்சலி செலுத்தினார். 


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அஞ்சலி செலுத்தினார். 


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி செலுத்தினார். 

 

 


மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மு.க. ஸ்டாலினிடம் திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார். 

 

 


ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு ஜெ. திபா மற்றும் மாதவன் அஞ்சலி செலுத்தினார்.

 

 


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு ஆர்.எம்.வீரப்பன் மலர்வளையம் வைத்து  அஞ்சலி செலுத்தினார். 


மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கவர்னர் ஆறுதல் கூறினார்.

 

 


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா பிரசன்னா அஞ்சலி செலுத்தினார்கள்.


ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அஞ்சலி செலுத்தினார்.


ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் பிரபு, மற்றும் அவரது மகன் விக்ரம் பிரபு அஞ்சலி செலுத்தினர்.


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித் மரியாதை செலுத்தினார். பின்னர் மு.க. ஸ்டாலின், தயாநிதிமாறன் மற்றும் உதயநிதியிடம் உள்ளிட்டோரிடம் நடிகர் அஜித் ஆறுதல் தெரிவித்தார். 


 

Trending News