இந்த மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2021, 01:49 PM IST
இந்த மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  title=

தென்கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக

 தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

என்று, எங்கு எவ்வளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என காணலாம்:

22.11.2021: ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள். மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் (Rain) பெய்யக்கூடும்.

23.11.2021: மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இதர வட மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

24.11.2021: ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்  பெய்யக்கூடும்.

ALSO READ:வரும் நாட்களில் மழை அதிகரிக்கும்: எங்கு, எவ்வளவு மழை? விவரம் இதோ 

25.11.2021, 26.11.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சென்னைக்கான வனைலை முன்னறிவிப்பு: 

சென்னையை (Chennai) பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

தென்பரநாடு (திருச்சி), மூக்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி) தலா 4, மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு), எடப்பாடி (சேலம்), பந்தலூர் (நீலகிரி), ஆவடி (திருவள்ளூர்) கீழ அணைக்கட்டு (தஞ்சாவூர்) தலா 3, எம்ஆர்சி நகர் (சென்னை), ஒய்எம்சி நந்தனம் (சென்னை), தேவாலா (நீலகிரி), எம்ஜிஆர் நகர் (சென்னை), தரமணி  (சென்னை), சென்னை (நுங்கம்பாக்கம்) (சென்னை) தலா 2, பெரம்பூர் (சென்னை), பள்ளிக்கரணை (சென்னை), ஏசிஎஸ் கல்லூரி (சென்னை), சத்தியபாமா (செங்கல்பட்டு) எருமப்பட்டி (நாமக்கல்), அண்ணா பல்கலைக்கழகம்  (சென்னை), சங்கரிதுர்க் (சேலம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தளி (கிருஷ்ணகிரி), சத்யபாமா பல்கலைக்கழகம்  (காஞ்சிபுரம்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), ஏற்காடு (சேலம்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை.

மேலும் விவரங்களுக்கு:  imdchennai.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம். 

ALSO READ: விண்ணைத் தொடும் காய்கறிகளின் விலைகள்; இன்றைய நிலவரம் என்ன..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News