நீட் தேர்வு: ஆளுநர் மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துகிறார் - உதயநிதி ஸ்டாலின்

ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விவகாரம் குறித்து அறியாமையில் இருப்பதுடன், மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 14, 2023, 03:12 PM IST
  • அறியாமையில் இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி
  • நீட் விவகாரத்தில் விலக்கு அளிக்க வேண்டும்
  • ஒன்றிய அரசுக்கு அமைச்சர் உதயநிதி வலியுறுத்தல்
நீட் தேர்வு: ஆளுநர் மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துகிறார் - உதயநிதி ஸ்டாலின் title=

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.  பின்னர் பேசிய அவர், " 152 நகர்புற சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத் தரச் சான்றிதழ்களும், திறன் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்கு பணிநியமன ஆனைகளும், ஓட்டுநர் உரிமங்கள், சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கியதில் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எந்த மாவட்டத்திற்கு ஆய்வு சென்றாலும் அங்கு இருக்க கூடிய மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பாக தாயாரித்த பொருட்களை பார்வையிடுவேன். 

என்னுடைய வீட்டில் பயன்படுத்துகிற பாதி வகையான பொருட்கள் மகளிர் சுய உதவி குழு சார்பில் தாயாரித்த பொருட்களே. நான் மட்டுமல்ல முதலமைச்சர் வீட்டிலும் பயன்படுத்தபடுகிறது" என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வில் மாணவர் உயிரிழப்பு வருந்தக்கூடிய ஒரு விஷயம். இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்திருக்கிறார். இன்று அவருடைய தந்தையும்  உயிரிழந்திருக்கிறார்கள் மிகவும் வருத்தத்துக்குரியது. ஒன்றிய  பாஜக அரசு இதை மனதில் கொள்ளாமல் மாணவர்களுடைய வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டத்தை தொடரும்.

மேலும் படிக்க | ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் ஸ்டாலின்... உச்சமடையும் நீட் விவகாரம்!

மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். முதல்வர் இதற்கான நடவடிக்கை எடுப்பார். எந்தவிதமான தவறான நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் பேசுவது அவரது அறியாமையை காட்டுகிறது. மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துகிறார். மாணவர்களின் கல்வி ஆர்வத்தை கொச்சைப்படுத்துகிறார். நீட் விவகாரத்தில் ஆளுநர் திமிராகப் பேசுகிறார். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தனி உலகத்தில் வாழ்கிறார் ஆளுநர்" என கடுமையாக சாடினார்.

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் உயிரிழந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஜெகதீஸ்வரன் தந்தையின் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், " நீட் தேர்வால் தொடர்ந்து பல்வேறு மாணவச் செல்வங்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம்.

இதுவரை மாணவர்களை பறிகொடுத்த நாம் இப்போது மாணவச் செல்வங்களின் குடும்பங்களையும் பறிகொடுத்துக் கொண்டிருகிறோம். ஒன்றிய அரசு தயவு செய்து தமிழ்நாடு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன நிலையை புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு முறை சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். ஒரு முறை ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டார். மறுமுறை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். முதல்வர் கொடுத்த அழுத்தத்தின்பேரில் வேறு வழி இல்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

விரைவில் அதற்கு ஒரு முடிவை எடுக்க வேண்டும். முதல்வர் வேண்டுகோள் வைத்துள்ளார், தயவு செய்து யாரும் இது போன்ற முடிவை எடுக்காதீர்கள். விரைவில் ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். சட்டப்போராட்டம் மட்டுமே தீர்வு. இதற்கு மாணவர்கள் போராடினால் அவர்கள் பக்கள் திமுக மாணவர் அணி துணை நிற்கும். கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் இருந்து நீட்டை ரத்து செய்வோம் என்று ராகுல் காந்தி தெரிவித்து இருக்கிறார். அது நிச்சயம் நடக்கும்." என ஆவேசமாக தெரிவித்தார். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியின் தம்பி கைது இல்லை - அமலாக்கத்துறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News