கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ கோவை மாநகரில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. 44 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணிகள் முடிவடைந்துள்ளது. 26 கோடி ரூபாய் மதிப்பில் 6 இடங்களில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 140 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 210 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியில் 117 கி.மீ. சாலைப் பணிகள் நடைபெற்றுவருகிறது.
பல ஆண்டுகளாக கடந்த ஆட்சியில் சாலைகள் போடவில்லை. அதனால் சாலைகள் சேதமடைந்துள்ளன. வட கிழக்கு பருவமழை காலத்தில் சாலைப் பணிகளை செய்யக்டாது என்றில்லை. எல்லா நாளும் மழை பெய்வதில்லை. நிதி வந்து டெண்டர் முடிந்த பின்னர் தான் பணிகளை செய்ய முடியும். மழை பெய்யும் போது சாலை அமைக்கும் பணிகள் நடக்காது” என்றார்.
மேலும் படிக்க | கோவையில் பந்த்; ஆனா அது அண்ணாமலைக்கே தெரியாது - பாஜக துணை தலைவர்
அதன் பிறகு அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “கட்சி தலைமைக்கு தெரியாமல் பாஜக மாவட்ட நிர்வாகிகள் எப்படி பந்த் அறிவிக்க முடியும்? கட்சியை சரியான வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் பந்த் அறிவித்தார்கள் என கேட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம்.
கட்சி தலைமைக்கு தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் பந்த் என எப்படி சொல்ல முடியும்? கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்த்தை ரத்து செய்ய வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்க்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது மக்கள் ஏற்காத நடைமுறை” என பதிலளித்தார்.
மேலும் பேசிய அவர், என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை என்னை இன்னும் மேம்படுத்துவதாக எடுத்துக் கொள்கிறேன். ஆளுநர் கல்லூரி நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஏற்புடையது அல்ல. ஆளுநருக்கு எல்லா அதிகாரமும் உள்ளது. கோவை கார் வெடிப்பு தொடர்பாக டிஜிபி, தலைமை செயலாளரை அழைத்து பேசி, அவரே என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை செய்திருக்கலாம்.
மேலும் படிக்க | கடிவாளம் போட்ட காவல் துறை... பதிலளிப்பரா அண்ணாமலை?
கோவை காவல்துறை இவ்வழக்கை மிகத் திறமையாக கையாண்டுள்ளது. மாதக்கணக்கில் டெல்லியில் இருக்கும் வானதி சீனிவாசன் எத்தனை நாட்கள் தொகுதியில் இருக்கிறார்? அவரது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிக்கே வானதி வரவில்லை. பாஜகவினர் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை முடித்துவிட்டு வரட்டும் என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ