CHENNAI: சென்னையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் கே. ராஜு (Sellur K. Raju) தொடங்கி வைத்தார். இன்று தலைமை செயலகத்தில் வெங்காய விலை உயர்வை கட்டுபடுத்தி கூட்டுறவு துறையின் பண்ணைப் பசுமை மற்றும் நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் கிலோ ரூ.45 என்ற விலையில் தரமான வெங்காயம் விற்பனை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இன்று தலைமை செயலகத்தில் வெங்காய விலை உயர்வை கட்டுபடுத்தி கூட்டுறவு துறையின் பண்ணைப் பசுமை மற்றும் நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக சென்னை & அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் கிலோ ரூ.45 என்ற விலையில் தரமான வெங்காயம் விற்பனை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. pic.twitter.com/ffVgSszTJr
— Sellur K Raju (@SellurKRajuoffl) October 21, 2020
மகாராஷ்டிரா உள்ளிட்ட தென்னிந்தியாவில் (South India) வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கனமழை பெய்ததே வெங்காய விலை திடீரென உயர்வுக்கு காரணம். கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெங்காய விலையில் பெரும் தாக்கம் ஏற்பட்டு உள்ளது.
அதேபோல இந்த முறை கர்நாடகாவின் பெங்களூரிலிருந்து (Rain in Bengaluru) வெங்காய வரவில்லை. அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக வெங்காய செடிகள் நீரில் மூழ்கி அழிந்தது. மழையின் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ALSO READ | தொடரும் கனமழை.. 100 ரூபாய் தாண்டிய ஒரு கிலோ வெங்காயத்தின் விலை!!
அத்தகைய சூழ்நிலையில், வெங்காயத்தின் விலை தொடந்து அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும், மேலும் வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும். நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தையான லாசல்கானில் (Lasalgaon) வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதனால் தமிழகத்தில் சுற்றி இருக்கும் அண்டை மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழகத்துக்கு (Onion Price In Tamil Nadu) வர வேண்டிய வெங்காயம் தடைப்பட்டுள்ளதால், பல மாவட்டங்களில் ஒரு கிலோ 100 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ALSO READ | நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களில் வெங்காயம், பூண்டு ஏன் சாப்பிடக் கூடாது..!!!
இதனையடுத்து வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த, கூட்டுறவு பண்ணை பசுமைக் காய்கறி கடைகள் மூலம் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR