மத நம்பிக்கைக்கு சான்றிதழ் அளிக்க எம்.ஆர்.காந்தி யார்?... விளாசிய அமைச்சர் மனோ தங்கராஜ்

யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு இல்லை என்று சான்றளிக்க எம்.ஆர். காந்தி யார் என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 18, 2022, 06:14 PM IST
  • எம்.ஆர். காந்திக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி
  • அமைச்சர் வடம் பிடித்ததற்கு பாஜகவினர் எதிர்ப்பு
 மத நம்பிக்கைக்கு சான்றிதழ் அளிக்க எம்.ஆர்.காந்தி யார்?... விளாசிய அமைச்சர் மனோ தங்கராஜ் title=

கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை குமார சுவாமி கோயிலில் கடந்த 11ஆம் தேதி தேர் திருவிழா நடந்தது. இந்தத் தேரோட்டத்டஹி அமைச்சர்களான மனோ தங்கராஜும், அனிதா ராதாகிருஷ்ணனும் வடம் பிடித்து தொடங்கிவைத்தனர்.

ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படி தேர் வடத்தை பிடிக்கலாம் என பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் எம்.எல்.ஏ.,  எம்.ஆர். காந்தி உள்ளிட்டோர் போராட்டமும் நடத்தினர்.

இந்தச் சமயத்தில் காவல் துறையினருக்கும், பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் காந்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதிமணி... காரணம் என்ன?

இதற்கிடையே தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த எம்.ஆர். காந்தி குங்குமம், விபூதி பூசாதவர்கள் கோயில்களில் ஏன் வடம் இழுக்கிறார்கள்?

Gandhi

கிறிஸ்தவ அமைச்சர் வரக்கூடாது என பக்தர்கள் எதிர்த்தார்கள். அதனால்தான் நாங்களும் அவர்களுடன் இணைந்து போராடினோம்” என கூறியிருந்தார்.

இந்நிலையில் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “யாருக்கு மத நம்பிக்கை இருக்கிறது, யாருக்கு இல்லை என்று சான்றளிக்க எம்.ஆர்.காந்தி யார்? எதன் அடிப்படையில் அவர் சான்றளிக்கிறார்?

 

பொதுமக்களே கோயிலுக்கு அழைக்கும் சூழலில் இந்து அறநிலையத்துறையும் அரசாங்கமும் ஒன்றுதான் என்றுகூட தெரியாத பாஜகவை சார்ந்த எம்.ஆர். காந்திக்கு அமைச்சர் கோயிலுக்குள் வரக்கூடாது என்று சொல்ல யார் அதிகாரம் கொடுத்தது?

 

1996ஆம் ஆண்டு மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்த காலத்திலிருந்தே பல கோயில் விழாக்கள், கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அழைப்பின் பெயரில் கலந்துகொண்டு வருகிறேன்.

குமரி மாவட்டத்தில் முதலமைச்சருடைய உத்தரவின் பெயரில் கோயில்களில் 50 கோடி ரூபாய்க்கான திருப்பணிகள் நடைபெறுகின்றன, இதனை பாஜகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையா?

 

பிரிவினைவாத அரசியல் செய்ய முயலும் பாஜகவை பார்த்து மக்கள் சிரிக்கின்றனர். மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நன்றி அறிவித்தல் நிகழ்ச்சிக்கு முறைப்படி முன்னாள் மத்திய அமைச்சர்  பொன் ராதாகிருஷ்ணனையும், சட்டமன்ற உறுப்பினரையும் அழைத்திருந்தனர்.

 

ஆனால் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. மாற்று மதங்களை எதிரிகளாக பார்க்ககூடியவர்கள்தான் பாஜகவினர். திமுகவினர் எல்லா மதங்களையும் மதிக்ககூடியவர்கள். 

ஆன்மிகத்தை மத வெறியாக மாற்றுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர் பாஜகவினர். பாஜகவினருக்கு ஆன்மிகம் பற்றி படிக்க ஆசையிருந்தால் என்னிடம் வரட்டும் நான் கற்றுக்கொடுக்கிறேன்” என ட்வீட் செய்திருக்கிறார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News