ஒருசில இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியது - அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் ஒருசில இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 4, 2022, 12:03 PM IST
  • சென்னையில் கடந்த சில நாள்களாக மழை
  • மழை நீர் சாலைகளில் தேங்கியத்
  • சென்னை மாநகராட்சி துரித நடவடிக்கை இறங்கியது
 ஒருசில இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியது - அமைச்சர் கே.என்.நேரு title=

சென்னையில் இரண்டு நாள்களுக்கு முன்பு மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கின. அதேசமயம் தேங்கிய தண்ணீரை சென்னை மாநகராட்சி உடனடியாக அப்புறப்படுத்தியது. இந்தச் சூழலில் நேற்று மீண்டும் சென்னையில் மழை பெய்தது. இதனால் மழைநீர் மீண்டும் தேங்கியது. இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு கொளத்தூரில் நடந்த மழைநீர் வடிகால் பணிகளை இன்று ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று இரவு முதல் பெய்த மழையால் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. புதிதாக கால்வாய் கட்டாத பகுதியிலும் ஏற்கனவே உள்ள பகுதியிலும் நின்ற மழைநீரை மின்மோட்டார் மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. சேரும் சகதியும் கூட அகற்றப்பட்டுள்ளது.

திமுக சார்பில் மருத்துவ முகாம்கள் 4 இடங்களில் நடக்கிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீர் முழுமையாக அகற்றும் பணி முடிந்தவுடன் சென்னை முழுவதும் சாலைகள் சீரமைக்கப்படும். இதற்காக முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். மழை முடிந்தவுடன் சாலைகள் செப்பனிடும் பணி தொடங்கும். கடந்த 10 வருடமாக அ.தி.மு.க. ஆட்சியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளாததால் தான் சென்னையில் மழைநீர் தேங்கியது. அவர்கள் அந்த பணியை செய்திருந்தால் எப்படி தண்ணீர் தேங்கி நிற்கும். 

மேலும் படிக்க | ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு - முழு விவரம்

தூர்வாரும் பணியை செய்யாததால்தான் சென்னை பாதித்தது. 1000 கி.மீ தொலைவிற்கு மழை நீர் கால்வாய் பணிகளை செய்ய நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் தென் சென்னை, மத்திய சென்னை பகுதியில் அறவே தண்ணீர் தேங்கவில்லை.வட சென்னையில் கொளத்தூர், திரு.வி.க.நகர் பகுதியில் மட்டும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியது. அதுவும் ஓட்டேரி கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றதால் மழைநீர் தேங்கியது. 

கொளத்தூர் கன்னித்தீவு போல இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது வேறு நினைவை ஏற்படுத்துகிறது. அவர் போகிற கன்னித்தீவு வேறு. அவர் கட்சியில் தான் இருப்பதை காட்டிக்கொள்ளவே இது போன்று பேசுகிறார். மழைநீர் கால்வாய் பணிக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பிள்ளையார் சுழி போட்ட தாக கூறுவது தவறு. முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்க மழைநீர் வடி கால்வாய்க்கு அதிக நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறார். நிதி ஒதுக்கி செயல்படுத்தியது யார் என்பதை பார்க்க வேண்டும். அவர்கள் செய்கிறோம், செய்கிறோம் என்றார்கள். ஆனால் கடைசி வரை செய்யவில்லை” என்றார்.

மேலும் படிக்க | குழந்தை திருமணம் நடைபெறவில்லை! சிறுமியின் தந்தை & தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News