ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

Minister I Periyasamy Meeting: ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 14, 2023, 09:27 AM IST
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
  • அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டம் குறித்த கலந்தாலோசனை
  • பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் title=

தமிழகத்தில் கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்காக முதல்  ஸ்டாலின் ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

இதில் திட்ட இயக்குனர் தண்டபாணி, ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

2021 – 2022 மற்றும் 2022 – 2023 நிதியாண்டுகளில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி ஊராட்சி வளர்ச்சி திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், முதல்வரின் கிராமப்புற சாலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 22,162 பயனாளர்கள் உள்ள நிலையில் 14,628 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 101 சதவீதம் வேலை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 77 சதவீதம் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டது. 

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கா தொடங்கப்பட்ட இத்திட்டம் அனைத்து கிராம மக்களையும் சென்றடைய வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் இரு கிரமாங்களுக்கு ஒரு கிளஸ்டர் தொடங்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.  

நூறு நாள் வேலை திட்டத்தில் அதிக நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தல். அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். முதல்வரின் கிராமப்புற சாலை  மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | கார் கடன் வாங்க போறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் கவனீங்க!

அனைத்து ஊராட்சிகளுக்கு குடிநீர், சாலை, தெரு விளக்கு ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும், முடிவுறாத திட்டப்பணிகளான 2 கதிர் அடிக்கும் களங்கள், 4 அங்கன்வாடி மையங்கள், 2 சமையல் கூடம்,  பள்ளி கழிவறை, அனைவருக்கும் வீடு திட்டத்தில் 150 வீடுகள்,  3 பள்ளி கட்டிடங்கள் ஆகியவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தினார். 

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்காக ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நிதி நெருக்கடி நிலவும் சூழ்நிலையிலும் பள்ளி கட்டிடங்களை சீரமைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் உப் ரூ.800 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். அனைத்து பள்ளி கட்டிடங்களும் சீரமைக்கப்படும் எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி விவகாரம் குறித்த கேள்விக்கு மக்களிடம் நலத்திட்ட பணிகளை கொண்டு செல்வது எங்கள் வேலை கூட்டணி குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு! எப்போது இருந்து தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News